பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 வாய்மொழியும் வாசகமும் பாரித்திருந்தும் ஆன்மாக்கள் அவ்வழியைப் புறக்கணித்து ஏனைய மூன்று வழிகளிலேயே செல்லுகின்றன. ஆனால், ஈ:பெருமான் என்றேனும் ஒரு பிறவியில் இந்த வழிக்கு அவர்கள் வரக்கூடும் என்று எண்ணி மேன்மேலும் உலகினைப் படைத்து வருகின்றான். இதனைப் பெரிய திருவந்தாதியிலும் சோம்பாது இப்பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தகா (18) என்கின்றார். இங்ஙனம் மேன் மேலும் கைவாங்காமல் ஒரு நசையாலே உலகத்தைப் ப ைட த் து க் கொண்டே வந்த எம்பெருமானுடைய வேளாண்மை என் ஒருவனைப் படைத்ததனால் பலித்த தால் அவனையே கவிபாடும் படியான பேறு பெற்றேன்” என்கின்றார். அவன் எதிர்சூழல்புக்குத் திரிந்து பண்ணின கிருஷிபலித்து அவனுக்குக் கவியாகப் பெற்ற எனக்கு” என்பது நம்பிள்ளை ஈடு. எம்பெருமானது கவியாக வாய்க்கப்பெற்ற நான் இனி மற்றொரு நீசனையும் கவி பாடி நின்றேனாகில் எம்பெருமானுக்குப் பலித்த வேளாண்மை விணாகுமன்றோ? ஆகையால் அத்தகைய செயலில் ஈடுபடுவது என் இயல்புக்கு மாறானது' என்று தலைக்கட்டுகின்றார்; * இங்ங்ணம் சமயப் பெரியார்களின் அறிவுரையைச் செவி மடுத்த பிறகு அவற்றைச் சிந்தித்தும் தம் அநுபவத்தை யொட்டியும் பிற்காலக் கவிஞரொருவர், கல்லாத ஒருவனையான் கற்றாய் என்றேன் காடெறியும் மறவினைகா டாள்வாய் என்றேன் பொல்லாத ஒருவளைநான் நல்லாய் என்றேன் போர்முகத்தை அறியானைப் புலியேன் என்றேன் மல்லாரும் புயம் என்றேன் சூம்பல் தோளை வழங்காத கையனைாான வள்ளல் என்றேன் இல்லாத சொன்னேனுக்கு இல்லை என்றான் யானும் என் குற்றத்தால் ஏகின் றேனே என்று கூறுவார். ஆனால் இக்காலத்துக் கவிஞர்களில் 6. ஒரு தனிப்பாடல்