பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வாய்மொழியும் வாசகமும் (Compounds). இப்படிக் கலப்பதனைப் பஞ்சீ கரணம்' என்று வேதாந்த நூல்கள் விளம்பும். இவ்வாறு கலக்கும் பொருள்களை அறிவியலார் தனிமங்கள் என்று பேசுவர். இவற்றோடு பிறவற்றையும் சேர்த்து வைணவம் 26 தத்துவங்களாகவும் சைவம் 36, 96 தத்துவங்களாவும் விளக்கும். அவற்றுள் புகுவது மற்றொன்று விரித்தலாய் முடியுமாதலால் இவற்றோடு நிறுத்துவேன். பொருள்கள்ை ஆக்கும் அடிப்படையான துகளே அனு வாகும் என்பதை நாம் அறிவோம். இந்த உலகமும் இதனை யொத்த வேறு அண்டங்களும் அணுவினால் ஆகி யவையே. பூக்கள் சேர்த்து பூமாலை யாதல்போல் அணுக்கள் சேர்ந்து அண்டங்களாகின்றன. இவை யெல் வாம் கதிரவமண்டலத்தில் அடங்கியவை. கதிரவம்.ண்ட லத்தில் கதிரவனுக்கு மிக அண்மையிலிருப்பது புதன்: தொடர்ந்து சுக்கிரன், பூமி, செவ்வாய், குட்டிக் கோள்கள் (Asteroids), வியாழன், சனி, யுரேன்ஸ் (நிருதி) நெப்டியூன் (வருணன்) புளுட்டோ (குபேரன்) என்றவரிசையில் அமைந் துள்ளன. இப்படியே எண்ணற்ற கதிரவ மண்டலங்கள் விண்வெளியில் அமைந்து உலவிக் கொண்டுள்ளன. இவை தவிர பல்லாயிரக்கணக்கான நட்சத்திரக் கூட்டங்கள் வான வெளியில் கண் சிமிட்டிக்கொண்டுள்ளன. இவற்றுள் சூரியன் சந்திரன் (துணைக்கோள்), புதன், வியாழன் (குரு.பிரகஸ்பதி), வெள்ளி, சனி, இராகு, கேது இவற்றின் அடிப்படையில் சோதிட சாத்திரம் (Astrology) உருவாகி யுள்ளது. அறிவியல் அடிப்படையில் அண்ட கோளங்களி லுள்ள அனைத்தின் அடிப்படையில் வான சாத்திரம் (Astronomy) அமைந்துள்ளது. சோதிடசாத்திரம் சமயத்தில் புகுந்து விட்டதால் திருக்கோயில்களில் "நவக்கிரகங்கள்’ என்ற பெயரில் இடம் பெற்று வழிபாடும் பெற்று வருகின்றன. இந்த அண்டங்களையெல்லாம் வைணவ தத்துவம் அசித்து' என்ற தத்துவத்திலும் சைவ சித்தாந்தம் பாசம் என்ற தத்துவத்தினும் அடக்கி விளக்கும். மேலும் அசித்து எம்பெருமானுக்கு உடலாக