பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயமும் அறிவியலும் w 7 இருக்கும். இதன்ைச் சரீர-சரீரிபாவனை என்று வைணவம் பேசும். இத்துடன் இது நிற்க. உலகத்தோற்றத்தில் - உலகம் உண்டாதலாகிய காரியத்தில் . இறைவனே முதற் காரணம், நிமித்த காரணம், துணைக் காரணம் என்ற மூவகைக் காரணங்களாக உள்ளான் என்ற வைணவ தத்துவத்தைக் கொண்டு அண்டங்கள் உண்டாதலை விளக்கலாம். அசித்து சூக்குமமாக இருக்கும் நிலையில் - அஃதாவது உலக உற்பத்திக்கு முன்னர் - அதனுள் இறைவன் அந்தர்யாமியாக சங்கற்பத்தோடு நின்று இருக்கும் நிலையில் இறைவன் உலகிற்கு முதற் காரணமாகின் றான். இங்கினம் நுண்ணிய நிலையில் இருக்கும் அசித்தை வெளிப்படுத்தி உலகப்படைப்பு செய்வோம் என்று இறைவன் எண்ணுகின்ற நிலையில் இறைவன் உலகிற்கு நிமித்த காரணமாகின்றான். இறைவனுடைய ஞானம், சக்திமுதலியவையே துணைக் காரணமாகின்றன. ஆக,இம் முறையில் இறைவன் மூன்று காரணங்களுமாக உள்ளான் என்று மெய்விளக்க அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். இக் கருத்தினை ஆழ்வார் பல இடங்களில் குறிப்பிட்டிருப்பதைக் கானலாம்.? மேற்குறிப்பிட்ட மூன்று காரணங்களுள் இறைவன் உலகிற்கு முதற் காரணம் என்பது மிகவும் முக்கியமானது. காரணப் பொருள் பின் காரிய்ப் பொருளாக மாறுவது முதற் காரணம் என்பது பொது விதி. இங்கு இறைவனே இவ்வுலகப் பொருளாக மாறினான் என்றால், அங்ங்னம் அன்று. இவ்வுலகப் பொருள்கட்கு அவற்றின் துண்ணிய நிலை முதற் காரணம். பருப் பொருளாக மாறிய நிலைமை காரியம்; இல்லது வாராது; உள்ளது சிதையாது’ என்பது தத்துவம். வேதியியல் உண்மையும் இதுவேயாகும். இறை வன் நுண்ணிய நிலையிலுள்ள அசித்தின் உள்ளேயும் அந்தர் 8. திருவாய் 1,5:2; 1.5:4. வேறு பாசுரங்களிலும் இதனைக் கண்டு தெளியலாம்.