பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழியும் வாசகமும் வாமியாக உள்ளான்; பருப்பொருளாகவுள்ள நிலையிலேயும் அத்தர்யாமியாக உள்ளான். துண்மையான அசித்தில் இறை. வன் அந்தர்யாமியாக இருக்கும் நிலை முதற்காரண நிலை யாகும். பருப்பொருளாக உள்ள அசித்தில் இறைவன் அந் தர்யாமியாக உள்ள நிலையே காரிய நிலையாகும். அதனால் இறைவன் முதற் காரணமாகவுள்ள நிலையிலும், காரியமாகவுள்ள நிலையிலும் சிறிதும் வேறு படுவதில்லை. இதனால் இறைவன் விகாரமற்றவன்-நிர்விகாரன்-என்று சொல்லுவதில் தவறில்லை. இக்கருத்தை வித்தாய் முத விற் சிதையாமே (திருவாய் 1.5:2) என்ற ஆழ்வார் பாசு ரத்தின் தொடர் அழகுடன் விளக்குவதைக் கண்டு தெளிய லாம். உலகத்துப் பொருள்கள் போலன்றி இறைவன் தன் திலையில் சிறிதும் சிதைவின்றி இருந்து கொண்டே எல்லாப் பொருள்கட்கும் வித்தாக (முதற் காரணமாக) உள்ளான் என்பது கருத்தாகும். இங்கனம் இருத்தல் இவனுடைய ஆச்சரிய சக்தியாகும். இதன்னயே திவ்வியகவி பிள்னளப் பெருமாள் அய்யங்காரும், சின்னூல் பலபலவாயால் இழைத்துச் சிலம்பி பின்னும் அந்நூல் அருந்தி விடுவதுபோல் அரங்கர் அண்டம் பன்னு று கோடி படைத்து அவை பாவும் பழம்படியே மன்னுழி தன்னில் விழுங்குவர் போதமனம் மகிழ்ந்தே g என்ற அழகான உவமை கலந்த பாடலால் விளக்குவர். ஒரு சிறிய சிலந்திப் பூச்சி தன்னிடத்திலிருந்து நூலை உண் டாக்கித் தான் அதனை விழுங்குகின்றது. நூல் உண்டா தற்கு முதற் காரணமாகவுள்ள அப்பூச்சி தன் நிலையில் 9. திருவரங்க மாலை.18