பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயமும் அறிவியலும் § அழிவதில்லை. ஒரு சிலந்திக்கு இது கூடுமேல், தன் நிலை யில் சிதைவின்றித் தான் உலகிற்கு முதற் காரணமாதல் எல்லாம் வல்ல இறைவனுக்கு அரியதாகுமோ? ஒரு சிலந்திக்கு உண்டான ஸ்வபாவம் சர்வ சக்திக்குக் கூடாதொழியாதிதே என்ற தத்துவத்திரய வாக்கியமும் ஈண்டுநோக்கி உன்னற பான்தாகும். உலகத்தோற்றத்தைப் பற்றிச் சைவசித்தாந்தம் சற். காசிய வாதத்தின் அடிப்படையில் விளக்கும். ஒவ்வொரு காரியத்திற்கும் காரணம் இருந்தேயாக வேண்டும் என்பதை யாவரும் ஏற்றுக் கொள்வர். இதற்கு மேலும் ஒருபடி சென்று காரண நிலையிலும் காரியம் உண்டு என் பதை மெய்ப்பிக்கலாம். காரியம் எங்கிருந்தோ திடீரென்று புதிதாய்த் தோன்றுவது அல்ல. அஃது உற்பத்திக்கு முன்ன ரும் உள்ளது. இதுவே சற்காரியவாதம். இதனைத் தெளி வாக்குவேன். காணப்பட்ட உலகம் இதற்குமுன் ஒடுங்கிய நிலையில் காணப்படாத துண் (சூக்கும) நிலையில் இருந் தது. பின்னர் காணப்படும் பரு (துால) நிலையை அடைந் துள்ளது. இனி, முன்போலவே ஒடுங்கி நுண்ணிய நிலையை அடையும். ஆகவே, உலகம் என்றும் யாதே னும் ஒருநிலையில் உள்ளதேயன்றி இல்லாதுஒழிவதில்லை" என்பது புலனாகும். இதனை மேலும் தெளிவாக்குவேன். காணப்படாத நுண்ணிய நிலையில் இருந்த உலகம் காணப்படும் பரு 10. தத்து. ஈசுவரப். 29 11. காரியங்கள் பலவும் தோற்றத்திற்கு முன்னும் தத்தம் காரணங்களில் உள்ளனவே. என்பது சற். வாதம். சத்-உள்ளது; சிற்கர்ரியம்-உள்ள்தாகிய கச்சியம். இல்லது தோன்றும் என்பவர் அசற்காசிங்வாதிகள்.