பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 சமயமும் அறிவியலும் i அண்ட கோடிகள் வானில் அமைத்தனை, அவற்றில் எண்ண ற வேகம் சமைத்தனை: மண்ட் லத்தை அணுவணு வாக்கினால் வருவ தெத்தனை அத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை கோல மேகினைக் காளியென் றேத்துவேன்' என்று விளக்குவதுடன் அவற்றினிடையேயுள்ள தொகை யளவுகளையும் கற்பனை மூலம் கணக்கிட்டுக் காட்டுவர். புறமுக ஆற்றல் (Centrifugal force) என்ற இதை வனது ஆணையால் இக்கோள்கள்.அண்டங்கள்-வழிவிலகா மல் சுற்றி வந்து கொண்டுள்ளன. ஒவ்வொரு கோள்கட்கும் இடையிலும் பல்லாயிரக் கணக்கான மைல் இட்ைவெளிகள் உள்ளன. இந்த இடைவெளியில்தான் சில சமயம் வால் மீன்களையும் (Comets), வீழ்கொள்ளி அல்லது எரிமீன் களையும் (Meteors) காண்கின்றோம். இங்ஙனம் அண்டங்கள் விண்வெளியில் வெவ்வேறு வேகத்தில் சுழன்று கொண்டும் ஒன்றை யொன்று சுற்றிக் கொண்டும் உள்ள உண்மையை ஆண்டவனின் அலகிலா விளையாட்டாகக் கொள்வர் தி ரி கூ ட ராசப்ப கவிராயர். சாட்டைத் துணையின்றியே இத்தனை அண்டங் களையும் பம்பரம்போல் அண்டவெளியில் ஆட்டி வைக் கின்றான் என்று காட்டுவர். • . . . " சாட்டி நிற்கும் அண்டமெலாம் சாட்டையிலாப் பம்பரம்போல் ஆட்டுவிக்கும் குற்றாலத்து அண்ணலார், 21 - என்று அழகாகக் குறிப்பிடுவதைக் கண்டு மகிழலாம். 18. டிெ : டிெ : மகாசத்தி வாழ்த்து-1 17. குற்றா. குறவஞ்-197 வா. வா.-2