பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. திருமங்கையாழ்வார் தமிழகத்தில் சோழமண்டலம் என்பது ஒரு முக்கிய மான பகுதி. சோழ நாடு சோறுடைத்து' என்பது வழி வழியாக வழங்கி வரும் பொன்மொழியல்லவா? இன்று அது *தென்னாட்டின் நெற்களஞ்சியம்’ என்று போற்றப் படுகின் றது. சோழமண்டலத்தில் திருவாலிநாடு என்ற ஒரு பகுதி யுண்டு. இதனை மங்கை நாடு என்றும் வழங்குவர். சீகாழிக்குக் கிழக்கே சுமார் ஏழு கி. மீ. தொலைவில் உள்ள திருநாங்கூர்த் திருப்பதிகள் ஈன வழங்கும் பதினோரு திவ்விய தேசங்கள் அடங்கிய பகுதியே மங்கை நாடு எனக் கருத இடம் உண்டு. சோழவேந்தனின் சேனைத் தலைவ ராகத் திகழ்ந்தவர் ஒருவர் திருநகரிக்கு அண்மையிலுள்ள திருக்குறையலூரைச் சார்ந்தவர். இவருக்கு ஒரு மகன் பிறந்தான். பிறந்த ஆண்டு நள என்பது; மாதம் கார்த்திகை; நாள் முழு மதியம் கூடிய கிருத்திகை நட்சத்திரம், கலந்ததிருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே என்பது இவரது வாழித் திரு நாமம். பிறந்த குழந்தை நீல நிறமாக இருந்தது பற்றி 'நீலன்" என்ற பெயர் வழங்கியது.பெற்றோர் இட்ட பெயர் 'கலியன்’ என்பது. இவரே பின்னர் திருமங்கையாழ்வா ராகின்றார்.இவரைத் திருமாவின் சார்ங்கம் என்ற வில்லின் அம்சமாகக் கொள்வர் வைணவப் பெருமக்கள். கலியன் தாம் பிறந்த குடிக்கேற்ப @arສu...@ລ3ບ ஆயுதப் பயிற்சி, குதிரை ஏற்றம், யானை ஏற்றம் முதலிய tசென்னை வானொலி (1989) இலக்கியப் பேருரை.