பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翻蘇 வாய்மொழியும் வாசகமும் வற்றிலெல்லாம் நன்கு தேர்ச்சியடைந்து சிறப்புடன் திகழ்ந் தார். தந்தையாருக்குப் பிறகு கலியன் ஆலி நாட்டின் தல்ை வராகவும் சோழமன்னனின் தானைத் தலைவராகவும் விளங்கினார். சோழமன்னருக்குக் கொடியவர்களோடு போர் நேருங்காலத்தில் படைகளோடு முன் சென்று பகை யையை வென்றதனால் பரகாலன் என்ற புகழ்ப் பெயரும் இவரை வந்தடைந்தது. இவை தவிர, அரட்டு அமுக்கி, அடையார் சியம், அருள்மாரி போன்ற வேறு புகழ்ப் பெயர் களும் இவருக்கு உண்டு. இவரே பல சுருதிப் பாசுரம் ஒன்றில் (பெரி-திரு. 3, 4:10, - . . அங்கமலத் தடவயல்சூழ் ஆலி நாடன் அருள்மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம் கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கை வேந்தன் கொற்றவேல் பர காலன் என்று இப்புகழ்ப் பெயர்க்ளை சுட்டியிருப்பதைக் கண்டு மகிழலாம். い ・ × இவருடைய இப்பற்ற வீரச் செயல்களை யுணர்ந்த சோழ வேந்தன் இவரைத் திருமங்கை நாட்டுக்குச் சிற்றரச னாக முடிசூட்டினான். திருமங்கை மன்னனும் தம் அமைச் சரவையுள் நீர்மேல் நடப்பான், நிழலில் ஒதுங்குவான். தாள் ஊதுவான், தோலா வழக்கன் என்ற நால்வரை அமர்த்திக் கொண்டு அரசுப் பணிகளைக் குறைவின்றி நடத்திப் புகழைப் பெருக்கிக் கொண்டார். இவர் இவர்ந்து வரும் ஆடல்மா என்ற குதிரை இவரது தீரச் செயல்களி லெல்லாம் மிகவும் துணையாக இருந்தது. அரசராக இருந்தபொழுது இவர் கலையினொடும் கலைவாணர் கவியினொடும்..."இசையினொடும் பொழுது போக்கினார். வேட்டையாடுவதில் விருப்பமிக்கவராயிருந் தார். அரசர் முதலியவர் பொருட்டு அதிகமாக உழைத்துப் பெரும் புகழ் பெற்றார். இவ்வாறு இவ்வுலக வாழ்வில் ஆழ்ந்து கிடந்த இவர் பாரமார்த்திகப் பெரு நெறியில் புகு