பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமங்கையாழ்வார் 45 வதற்கேற்ற வாய்ப்பு தோன்றத் தொடங்கியது. திருமணம் இல்லற வாழ்வில் ஆழ்த்துவதுதான் இயல்பாக நடைபெறு வது, அதற்கு மாறாக இவரது திருமணம் திதில் தன்னெறி யாகிய பாரமார்த்திகப் பெருநெறியில் புகுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. அதற்கேற்ற அருணோதயமும் தோன்றியது. . 'திருவெள்ளக்குளம் என்பது திருநாங்கூர்த் திருப்பதி களுள் ஒன்று. அண்ணன் கோயில் என்ற பெயராலும் இது வழங்கும். இந்த ஊரில் மருத்துவ வைணவ அடியார் ஒருவரின் வளர்ப்பு மகள் குமுத வல்லியார்: பேரழகுடன் திகழும் பெரு மாட்டி. ஒரு சமயம் அந்த அடியாரின் இல்லத் திற்குச் சென்றிருந்தார் திருமங்கை மன்னன். அப்போது அந்த அடியவர் தம் வளர்ப்பு மகளின் திருமணம் பற்றித் தம் கவலை தெரிவித்தார். அப்பொழுது அந்தப் பெண் மணியும் இல்லத்தின் புறத்தே ஏகுவதைக் கண்டார் கலியன். அப்பெண்ணின் எழில்திருமேனியும் அன்ன தடையும் மருண்ட மான்நோக்கும் மன்னரைக் கவர்ந்தன. உடனே கலியனும் அப்பெண்ணைத் தாம் மணப்பதாகக் கூறினார் வளர்ப்புத் தாய் தந்தையர் திருமணத்தைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் அந்த எழில் நங்கை, *திருவிலச்சினையும் பன்னிரு திருமண் காப்பும் உடைய வர்க்கன்றி மற்றொருவருக்கு என்னைப் பேசலொட்டேன்" என்ற தன் குறிக்கோளைத் தெரிவித்தாள். கலியனும் நாச்சி யார் கோயில் என்று வழங்கும் திருநறையூர் சென்று ஆங்கு எழுந்தருளியுள்ள நம்பி திரு முன்பு திருவிலக்கினை பெற்று பன்னிரண்டு திருமண் காப்புகளையும் தரித்துக் கொண்டு வந்தார். ஆசையுடன் குமுதவல்லியாரைச் சந்தித்தார். குமுதவல்லியார் இப்பொழுது வேறொரு நிபந்தனையை விதிக்கின்றார். கலியனைப் பார்த்து ஒராண்டு நாடோறும் 1008 ரீவைணவர்கட்கு அமுது செய்வித்து அவர்களு டைய புரியாததிர்த்தமும் பிரசாதமும் உண்டு நிறைவேற்