பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமங்கையிர்ழ்வார் §f (வைகுண்டப் பெருமாள் கோயில்), திருப்பாடகம் (பாண் டவதுரதர் சந்நிதி) ஆகிய திருக்கோயில்களில் சேவை சாதிக்கும் எம்பெருமான்களை மங்களாசாசனம் செங்கின் றார்: காஞ்சிக்கு வெளியில் சுமார் பத்து கி. மீ. தொலைவி இலுள்ள திருப்புட்குழி எம்பெருமான் விசயராகவப் பெருமா ளையும் மங்களாசாசனம் செய்து தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணத்தை நிறைவு செய்கின்றார். கடு காட்டுப் பயணம் : நடு நாட்டில் திருக்கோவலூர், திருவயிந்திரபுரம் என்ற இரண்டு திவ்விய தேசங்கள் உள்ளன. இவற்றுள் திருக்கோவலூர் திவ்வியப்பிரபந்தம் பிறந்த இடம். மூவரும் நெருக்கி மொழிவிளக்கு ஏற்றி முகுந்தனைத் தொழுத இடம் என்று வில்லிபாரதத்திற்கு சிறப்புப் பாயிரம் வரைந்த, வரந்தருவார்.போற்றிப்புகழ் வர். திருக்கோவலூரில் எழுந்தருளியிருக்கும் திரிவிக்கிரம னைத் திருமங்கையாழ்வார் திருக்கோவலூர்த் திங்கரும்பு' என்று உருவகித்துப் புகழ்வர். இதற்கேற்ப, வேதாத்தி தேசிகர் மூன்று ஆழ்வார்களைக் கரும்பினைப் பிழியும் மூன்று ஆலை உருளைகளாகவும், அவர்களால் தெருச் குண்ட எம்பெருமானைக் கரும்பாகவும், அந்த எம்பெரு மானின் செளலப்பிய குணத்தைச் சாறாகவும் தமது தேகளிசஸ்துதியில் உருங்கித்துப் புகழ்ந்துள்ளமை இப்போது நம் நினைவிற்கு வருகின்றது. தமிழ்ப் பாசுரங்களின் கருத்து வடமொழிச் சுலோகங்களுக்கு அடிப் படையாக அமைந்ததைக் கண்டு நாம் பெருமிதம் அடை கின்றோம். இந்த எம்பெருமானை மங்களாசாசனம் செய்தபிறகு திரு.அயிந்திரபுரம் வருகின்றார் ஆழ்வார். இங்குத் திருக்கோயில் கொண்டிருக்கும் தெய்வநாயகனை மங்களாசாசனம் செய்தபிறகு சோழநாட்டுத்திருத்தலப் பயணத்தை மேற்கொள்ளுகின்றார். சோழநாட்டுத் திருத்தலப்பயணம் : முதன் முதலாகத் தில்லைத் திருச்சித்திர கூடம் என்னும் திருப்பதியில் இழி