பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழியும் வாசிகமும் t; § ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும், கானிலம் சூழ் வேலை அன்ன கோல மேனி வண்ணன் என்றும் (4.8:6) என்ற திருநாங்கூர் பார்த்தன்பள்ளிப் பாசுரத்திலும், பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து பாரதம் கையெறிந்து ஒருகால் தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த செங்கண்மால் (4.10:5) என்ற திரு வெள்ளியங்குடிப் பாசுரத்திலும் இந்தத் தொடர் காணப்படுகின்றது. இங்கு உண்ணல் என்பது அழித்தலை யும், உமிழ்தல் என்பது படைத்தலையும் குறிக்கின்றன. இவற்றுள் உண்ணல் உலகம் இருக்கும் நிலையில் இருக்கும் இருப்பையும், உமிழ்தல் பருப்பொருளாக இருக்கும் இருப்பையும் குறிக்கின்றன. ஒரு பொருள் உண்டாவதற்கு முதற் காரணம்: துணைக்காரணம், நிமித்த காரணம் என்று மூன்று காரணங்கள் கூறுவர் உலகியலில். ஆனால் உலகத்தோற் றத்திற்கு இறைவன் மூவகைத் காரணங்களாக உள்ளான் என்பது வைணவ தத்துவம் சித்தும் அசித்தும் குக்குமமாக (நுண்மையாக) இருக்கும் நிலையில், அதாவது உலக உற் பத்திக்கு முன்னர்-அவற்றுக்குள் இறைவன் அந்தர்யாமி பாக சங்கற்பத்தாடு இருக்கும் நிலையில்-இறைவன் உலகிற்கு முதற்காரணமாகின்றான். இங்கனம் நுண்ணிய நிலையில் இருக்கும் சித்து அசித்துகளை வெளிப்படுத்தி 'உலகப்படைப்பு செய்வோம்' என்று இறைவன் எண்ணு கின்ற நிலையில் இறைவன் உலகிற்கு நிமித்த காரணமாக அமைகின்றான். இறைவனுடைய ஞானம் சக்தி முதலி யவையே துணைக் காரணமாகின்றன. ஆக, இறைவன் இம்முறையில் உலகப் படைப்பிற்கு மூன்று காரணங் களுமாக உள்ளான் என்று மெய்விளக்க அறிஞர்கள்