பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமங்கையாழ்வார் 8የ முடிவு செய்துள்ளனர். இக்கருத்தினை ஆழ்வார் பல இடங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். ஆராவமுதனிடம் ஈடுபாடு : திருமங்கையாழ்வார் திருக்குடந்தை ஆரா அமுதனிடம் அளவற்ற ஈடுபாடு கொண்டவர் என்பதை அவர்தம் பாசுரங்களால் அறிய முடிகின்றது. மறைந்து போயிருந்த திவ்வியப் பிரபந்தம் வெளி வருவதற்குத் திறவு கோலைத் தந்தவரல்லவா? இந்த ஆழ்வார் இத்தலத்து எம்பெருமானை குடந்தை உத்தமன் (1. 5:4) என்கின்றார். தண்குடந்தை நகரா ளன் (3. 6, 5, 7) என்று பேசுகின்றார்; கொந்துலாம் பொழில்சூழ் குடந்தை தலைக் கோவினை. ..மறக்கேனே' (7. 3:8) என உள்ளம் உருகப் பாடுகின்றார். . துவிசேர் அன்னம் மன்னும் சூழ்புனல் குடந்தை யானைப் பாவியேன் பாவி யாது பாவியேன் ஆயினேனே --திருக்குறுந், 14 என்று உளம்உருகப் பாடுகின்றார். பழுதே பலகாலும் போயின என்று அங்கலாய்க்கின்றார். திருவுக்கும் திருவா கிய அழுந்தையில்மன்னி நின்ற அஞ்சனக் குன்றம்தன்னைச் சேவிக்கும் போதும் இந்த நகர் எம்பெருமான் ஆழ்வாரின் மனக் கண்ணுக்கு இலக்காகின்றார் - பேரானைக் குடந்தைப் பெருமானை இலங்கொளிசேர் போரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை ஆரா இன்னமுதை தென் அழுக்தையில் மன்னிகின்ற காரார் கருமுகிலைக் - கண்டு களித்தேனே (7.5:9) என்று எக்களிப்புடின் பாடுவதைக் காண்லாம்.