பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 வாருங்கள் பார்க்கலாம் முதல் பிராகாரத்தைச் சுற்றி வந்தபோது எனக்கு அப்பர் சுவாமிகளுடைய வரலாறு நினைவுக்கு வந்தது. 3 திருநாவுக்கரசர் இராமேசுவரத்தைத் தரிசித்துக் கொண்டு திருநெல்வேலிக்குச் சென்று நெல்லையப் பரை வழிபட்டார். பிறகு பாண்டி நாட்டிலுள்ள வேறு பல தலங்களுக்கும் சென்று தேவாரப் பதிகங் கள் பாடி இறைவனே இறைஞ்சினர். அப்பால் திருப்புகலூருக்கு வந்தார். அங்கேயே தங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டா யிற்று. உடம்பும் அறிவும் பக்தியும் முதிர்ந்து பழுத்த பழமாகிய அவர் தம்முடைய பாசம் நீங்கிப் பரமன் பாதத்தில் ஒன்றும் காலம் அணிமையில் இருக்கிற தென்ற உணர்ச்சியைப் பெற்ருர். அதனுல் அங்கே கோணப்பிரானத் தொழுது நாள்தோறும் உழவாரத் திருத்தொண்டுசெய்து வந்தார். உடம்பினுலும் உரை. யினுலும் உள்ளத்திலுைம் இடையருது தொண்டு புரியும் பெரியார் அவர். உடம்பு வருந்த, அடியார் நடக்கும் வழியில் உள்ள புல்லைச் செதுக்கிக் கல்லே ஒதுக்கி உழவாரத் தொண்டுசெய்தார். இறைவனே மகிழ்ந்து அருளிய திருநாவுக்கு அரசர் என்னும் பெயரைப் பெற்ற அந் நாவலர் பக்திச் சுவை கனிந்து ஒழுகும் பல பாடல்களைப் பாடி வாக்கினல் தொண்டு செய்தார். நின்றும் இருந்தும் கிடந்தும் எப்போதும் சிவனடியே சிந்திக்கும் இயல்பிலே சிறந்து விளங்கி நின்றர். . அவர் ஒடும் பொன்னும் ஒக்கவே நோக்கும் விரம் உடையவர் என்பதையும் பொன்னலும் பூவை