பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகலூர் மேவிய புண்ணியன் 95 யாராலும் அவருடைய உள்ளத்தைச் சலிக்கச் செய்ய இயலாது என்பதையும் உலகினர் அறியும் சந்தர்ப்பம் வந்தது. அப்பர் உழவாரத் தொண்டு செய்யும் போது பொன்னும் மணியும் அங்கே கிடக்கச் செய் தான் இறைவன். அவற்றையும் கல்லேயும் மண்ண்ே யும் போலக் கருதிப் புறத்தே ஒதுக்கித் தள்ளினர் அப்பர். அழகுடைய அணங்கினர் பலர் தம்முடைய ஆடல் பாடல்களால் கண்டோர் மயங்கும்படி கவரத் தொடங்கினர். வாகீசப் பெருந்தகையார் சிறிதும் தளர்வின்றித் தம் தொண்டிலே கண்ணுடை யவராகியிருந்தார். - அன்பர்கள் இந்த அதிசயத்தைக் கண்டு அப்ப ரைப் போற்றி வழிபட்டார்கள். புடமிட்ட பொன் ஆனப்போல வாகீசர் ஒளிவிட்டுப் பிரகாசித்தார். சித்திரை மாதம் வந்தது. அப்பர் சுவாமிகளுக்கு இறைவனுடைய திருக்குறிப்புப் புலப்பட்டது. இந்த உடற் சிறையினின்றும் விடுதலை பெறும் காலம் சமீ பித்து விட்டது என்பதை உணர்ந்தார். இறைவ త్థ్యా! அடியையன்றிப் புகல் புகும் இடம் வேறு ஏது . . . . . . . . . . இறைவனே நினைந்து மனமுருகி, "அப்பனே!. உன் திருவடியைச் சேரும் காலம் குறுகுகின்றது. குடியிருந்த இந்த வீட்டை விட்டு உயிர் அகலும் போது எத்தகைய வேதனை உண்டாகுமோ, யான் அறியேன். அப்போது இன்ன அநுபவம் உண்டா. கும் என்பதை நான் உணர மாட்டேன். உன் திரு. வடிக்கண்ணே அடைக்கலம் புகுவதுதான் என்னு டைய லட்சியம். புண்ணியா, உன் அடிக்கே போது கின்றேன்" என்று பாடினர், போகிற ஊருக்கு,