பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்ணெய் கல்லுர்ப் பித்தன். #35: கயாதல் உலகில் எங்கும் இல்லையே! நீர் ஏதோ சொ கிறீரே !’ என்று கேட்டார்கள். - "நான் சும்மாவா சொல்கிறேன்? இவனுடைய தகப்பனுக்குத் தகப்பன் கொடுத்த ஒலை இருக்கிறதே. இவன்கிழித்த ஒலேயில் அதைக் கண்டிருக்கலாமே!" உடனே அவையினர் நம்பியைப் பார்த்து, ‘இவர் ஓலே காட்டினரானல் அதை நீர் வலிந்து பறித்துக் கிழிக்கலாமா ? இவர் தம் வழக்கைச் சொன்னுர். நீர் என்ன சொல்கிறீர்?’ என்று கேட்ட னர். சுந்தரர் சொல்லலாளுர் : 'பெரியோர்களே, நீங்கள் நியாய சாஸ்திரங்களே ந ன் ரு க க் கற்றவர்கள். நான் ஆதி சைவன் என்பது உங் களுக்கு நன்ருகத் தெரியும். இவர் என்னைத் தமக்கு அடிமையென்று சாதிக்கிருர். இதை எங்காவது கண்டதுண்டா? இது மனத்துக்கே எட்டாத மாயை யாக அல்லவா இருக்கிறது ? எனக்கு இது பற்றி ஒன்றும் தெளிவு உண்டாகவில்லை.” - உடனே அவையினர் அந்த முதியவரை நோக்கி, "ஐயா, நீர் இவரை உம்முடைய அடிமை யென்று சொல்கிறீர். இதை நீர் எம் முன்பு நிரூபிக்க வேண்டும். ஆட்சி, ஆவணம், சாட்சி என்று மூன்று ஆதாரங்கள் உண்டு. அதுபோக பாத்தியத்தைக் கொண்டு இவரை உம் அடிமையென்று சொல்கிறீரா? அல்லது ஆவண ஓலையின்ஆதாரம் கொண்டு சொல். கிறீரா? அன்றி யாரேனும் உமக்குச் சாட்சி சொல்: வார்களா ? இந்த மூன்றுவகை ஆதாரங்களில் நீர் எதைக் காட்டி உம்முடைய வழக்கைச் சாதிக்கப் போகிறீர்?’ என்று கேட்டார்கள்.