பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை ஒவியங்கள் 241 வகையில் செயல்களைப் புரிந்தார். வேற்றுத் தீவுகளி லுள்ள மன்னரும் வந்து பாண்டியனுடன் நட்புப் பூண்டு இன்புற்றனர். அமைச்சுத் தொழிலில் பேராற்றல் உடையவராக இருந்தாலும் அவர் உள்ளத்தில் ஞான வேட்கை தீவிரமாக உண்டாயிற்று. சிவஞானம் பெற்று இறைவனருளுக்குப் பாத்திரராக வேண்டும் என்ற ஆவல் தலைதுாக்கி நின்றது. குருவின் திருவருள் இல்லாமல் இத்தகைய பேறு கிடைப்பதரிது என்று உணர்ந்து, "நம்மை ஆண்டு அருள் செய்யும் குருநாதன் எங்கே கிடைப்பான்!” என்று அலமந்து ஏங்கியிருந்தார். யாரேனும் பெரியவர்கள் வந்தால் அவர்களே அடைந்து வழிபட்டுத் தமக்குத் தோன்றிய ஐயங்களே அவர்கள்பாற் கேட்டுத் தெரிந்துகொள்ள முயல்வார். பலரிடம் இப்படிக் கேட்டுக் கேட்டுப் பழகியும் அவர் உள்ளம் அமைதி பெறவில்லை. அவர் உள்ளத்தில் தோன்றிய ஞான வேட்கை முறுகி வந்தாலும், புறத்தே அமைச்சருக் குரிய கடமைகளைச் செவ்வையாகவே ஆற்றி வந்தார். கள்ளக் காதல விடத்தன்பு கலந்துவைத் தொழுகும் உள்ளக் காரிகை மடங்தைபோல் உம்பரைக் காப்பான் - பள்ளக் காரிஉண் டவனிடத் துள்ளன்பு பதிந்து கொள்ளக் காவல னிடைப்புறத் தொழிலுமுட் கொண்டார்

  • காரிகை மடந்தை அழகையுடைய பெண். உம்பரைக் காப் யான் . தேவர்களைக் காக்கும்பொருட்டு. பள்ளக்காரி - க - லில் எழுந்த நஞ்சை. உண்டவன் - சிவபெருமான். - - *

வா, பா. - 18