பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 வாருங்கள் பார்க்கலாம் என்று அந்த நிலையைத் திருவிளையாடற் புராணத்தில் பரஞ்சோதி முனிவர் கூறுகிருர். இப்படி இருக்கையில் ஒருநாள் பாண்டிய அரச னது குதிரைப் படைக்குத் தலைவன் மள்னனிடம் வந்து, “அரசே, நம்முடைய குதிரைப் படை வரவரக் குறைந்து விட்டது” என்ருன் "ஏன்?" என்று காரணம் கேட்டான் பாண்டியன். “குதிரைகள் வாங் திப் பல காலமாகி விட்டமையால் பல குதிரைகள் இறந்துபோயின. எஞ்சியிருப்பவற்றில் கிழட்டுக் குதி ரைகள் பல; நோயுற்றவை பல. அவற்ருல் ஒரு பயனும் இல்லை' என்ருன் புதிய குதிரைகளே வாங்கிக் குதிரைப் படையைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் பாண்டியனுக்கு உண்டாயிற்று. அவன் திருவாதவூரரைப் பார்த்து, 'நமக்கு வேண்டிய குதிரைகளே ஆராய்ந்து வாங்கும் திறமை உமக்குத்தான் உண்டு. நீர் கடல் துறைக்குச் சென்று மேற்கு நாட்டிலிருந்து வந்து இறங்கும் குதிரைகளில் நல்லனவற்றைத் தேர்ந்து வாங்கி வாரும் உமக்கு வேண்டிய பொருளே நம் கருவூலத்திலிருந்து எடுத்துச் செல்லும்' என்ருன் திருவாதவூரர் அவ்வாறே பண்டாரத்தினின்று பல பெட்டிகளில் நிதியை எடுத்து வைத்து ஆட்களேக் கொண்டு தூக்கி வரச் செய்தார். - - தாம் பயணப்படுவதற்கு முன் சொக்கேசன் ஆலயம் சென்று அம்மையையும் அப்பனேயும் தொழுது வணங்கினர். இறைவன் சந்நிதியில் தொழுதபோது அவருக்கு ஒரு நினைவு தோன்றிற்று. 'இப்பொழுது பாண்டிய மன்னனுக்கு மற்ற மன்னர்