பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை ஓவியங்கள் 243 யாவரும் நட்புடையவர்கள். ஆகையால் எந்தக் கார ணத்தைக் கொண்டும் போர் நிகழ வாய்ப்பில்லை. அப்படி இருக்க வீணே படையைப் பெருக்கிக் கொள் வதனுல் என்ன பயன்? அதற்காக இந்தப் பொருளைச் செலவிடுவதைவிட இறைவன் பொருட்டும் அவன் அடியார்பொருட்டும் செலவிட்டால் உலகில் ஆன்ம நேய ஒருமைப்பாடும் அமைதியும் உண்டாகுமே! படையைக் கூட்டினுல் போரிடக் கூட்டுகிருன் என்ற எண்ணமே பிற மன்னர் உள்ளத்தில் உண்டா கும். அதனுல் அவர் அமைதி இழப்பர். தாம் போரில் முந்திக்கொள்ள எண்ணி அவரும் படையைப் பெருக்க முற்படுவர். இனிமேல் போர் வந்தால் பாது காப்பாக இருக்கட்டும் என்று செய்யும் இந்தச் செயலே போருணர்ச்சியைத் தூண்டி விடுவதாக அமைந்துவிடுமே! இவ்வாறன்றிச் சிவ புண்ணியச் செயல்களில் பொருளைச் செலவிட்டால் அன்பர்கள் பெருகுவார்கள். பகையும் வெறுப்பும் நீங்கும். அவையே போருக்கு முளைகளாதலால் அவை நீங்கி ல்ை போர் நிகழவே இடமிராது என்று அவருடைய சாந்த மயமான உள்ளம் எண்ணியது. அவர் இவ் வெண்ணத்தில் ஊன்றி நிற்கும்போது அர்ச்சகர் அவர் கையில் திருநீறளித்தார். இறைவனே நம்மு டைய கருத்துக்கு இசைவு காட்டுகிருன்; இதுவே அதற்கு அறிகுறி' என்று அமைச்சர்பிரான் உறுதி பூண்டார். புளகம் போர்ப்பக் கண்ணிர் வார அந்தத் திருநீற்றை அணிந்து கொண்டார். இறைவனிடம் விடைபெற்றுப் பொருட்சுமையோடு மதுரையை விட்டுப் புறப்பட்டார்.