பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 வாருங்கள் பார்க்கலாம் அப்போது இறைவன் திருவாதவூரரை ஆட் கொள்ளும் பொருட்டுக் குருநாதனுக வேடம் பூண்டு கணத் தலைவர் மாணுக்கராக உடன் வரத் திருப் பெருந்துறைக்கு வந்து ஆலயத்திலுள்ள குருந்த மரத் தடியில் எழுந்தருளி யிருந்தான். திருவாதவூரரும் முன்னே நல்வினேயின் ஆற்றலால் அவ்வூருக்குப் போய்ச் சேர்ந்தார். அவ்வூரை அணுகியது முதலே அவருக்குத் தம்மையும் அறியாமல் ஒருவித இன்ப உணர்ச்சி உண்டாயிற்று. மனம் உருகியது. 'என்ஆன ஆண்டளுரும் குருநாதன் இங்கேதான் இருக்க வேண்டும்' என்ற உள்ளுணர்வு தோன்றியது. ஆல யத்துக்குச் சென்ருர் தீர்த்தத்தில் நீராடி இறைவ இனத் தொழுது வலமாக வந்தார். அங்கே குருந்த மரத்தடியில் குருமூர்த்தியாக எழுந்தருளியிருந்த இறைவனேக் கண்டார். இறைவனேச் சூழ நின்ற அன்பர்கள் ஞானம் நிறைந்தவர்களாக விளங்கினர்கள். விரதம் இருந்து பக்குவம் மீதுர்ந்தமையால் விரதங்களை விட்டவர் பலர். ஆ ன ந் த க் கூ த் து ஆடுகிறவர் பலர். பாடுபவர் பலர். உலகம் நகைக்கும்படியாகப் பித் தரைப்போல இருப்பவர் பலர். அழுது கொண்டிருப் பவர் பலர். சிரித்து நிற்பவர் பலர். தம் அகக் கண் ணுல் இறைவன் திருவுருவத்தைத் தரிசித்துப் புறக் கண்ணுலும் உலகம் எங்கும் அவனேயே கண்டு, பிற வற்றைக் காணுத குருடராக நிற்போர் பலர். ஒழித்த நோன்பினர், ஆடலர், பாடலர், உலகம் பழித்த செய்கையர், அழுகையர். நகையினர், பாசம்