பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் சுமந்த மதுரை 265 கட்டு அவிழ்ந்து போகும். அதைக் கட்டுவான். மறுபடியும் மண்ணே வெட்டுவான். மண்ணேச் சுமந்து செல்வதும், கூடையை உடைப்பில் தவறிப் போடுவதும், எடுப்பவனைப்போலத் தண்ணிரில் வீழ் வதும், ஒரு மரத்தைப் பற்றிக்கொண்டு மிதப்பதும், கரையிலேற முயல்வதும், சுழியில் அகப்படுவதுமாக இப்படிப் பல விளையாடல்களைச் செய்து கொண் டிருந்தான். . - அப்போது அரசனுடைய ஏவலாளர்கள் வேலை ஒழுங்காக நடைபெறுகிறதா என்று பார்ப்பதற்காகப் பிரம்பும் கையுமாக வந்தார்கள். அங்கங்கே வரை யறுத்தபடி பங்குகளெல்லாம் அடைந்து வருவதைக் கண்டு ஒப்பிட்டுப் பார்த்தார்கள். அப்படி வரும் போது வந்தியின் பங்குக்கு வந்து பார்க்கையில் அது அடைபடாமல் இருப்பதைக் கண்டு சினங்கொண் டார்கள். இதை அடைக்கும் ஆள்காரன்.யார்?' என்று கேட்டு அறிந்துகொண்டார்கள். மன்மதனப் போல நின்ற இறைவனக் கண்டு, “ஏண்டா, மற்றப் பங்குகளேயெல்லாம் அவர்கள் அடைத்துவிட்டார் கள். நீ ஏன் இன்னும் இதை அடைக்காமல் இருக் கிருய்?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்த வேலை யாள் ஒன்றும் விடை சொல்லவில்லை. - ஏவலாளர்கள் அவனைப் பார்த்து அவன் மேனி வண்ணத்தில் மயங்கி அவனைப் பிரம்பால் அடிக்கக் கூசினர்கள். ‘இவன் யார்? பித்தனுே? ஏமாற்றும் எத்தனே? இந்திர சாலங் காட்டும் சித்தனே? தேவ லோகத்திலிருந்து வந்தவளுே? நன்ருக வாழ்ந்து கெட்ட குடும்பத்திலே பிறந்தவனே? இவன்