பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதியும் வீதியும் 43% வைத்தியலிங்கம் பிள்ளை. அன்பு இருந்தால் எதை யுமே பிணத்து இனிக்க இனிக்கப் பேச வரும்போல் இருக்கிறது! அந்த மலரை என் கையில் அவர் கொடுத்தார். ஞானசம்பந்தப் பெருமானது தமி; மணம் போல மலர்ந்து மணந்தது அது. “இங்கே வைகாசி மூலத்தில் சம்பந்தர் திருமணம் சிறப்பாக இருக்கும். ஞானசம்பந்தர் சோதியில் தோற்றிய வீதியில் புகுந்த நாள் அது. பிரம்மோற். சவம் முடிந்த மூன்ரும் நாள் ஞான சம்பந்தர் திருமணம் நடைபெறும். தமிழ்நாட்டு மக்கள் பலரும் கூடியிருந்த பழைய காட்சியைச் சேக்கிழார் வருணிக்கிருர். இப்போதும் அப்படிப் பக்தர்களும் புலவர்களும் ஆயிரமாயிரமாகக் கூடி நிற்கும் காட்சியைக் காணவேண்டும் என்பது அடியே. னுடைய ஆசை. திருவருள் துணை நிற்க வேண்டும்.” அவருடைய கனிவு என் உள்ளத்தை உருக் கியது. • சோதி மலைஒன்று தோன்றிற் றதில் ஒரு வீதிஉண் டாச்சுதடி என்ற பாடற் பகுதி என் உள்ளே ஒலித்தது.