பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Wi கட்டுரைகளே எழுதலாம் என்ற எண்ணம் எனக்கு உண்டா யிற்று. சைவ சமயாசாரியர்களாகிய நால்வர் திருவவதாரம் செய்த தலங்கள், அவர்கள் இறைவன் திருவருள் பெற்ற திருப்பதிகள், அவர்கள் இறைவளுேடு கலந்த தலங்கள் ஆகியவற்றைப்பற்றி எழுதலர்ம் என்று வரையறை செய்துகொண்டேன். அத்தகைய தலங்கள் பதின்மூன்று. அவற்றிற் பலவற்றிற்கு முன்பே சென்று தரிசித்திருக்கின் றேன். ஆனல் இப்போது கட்டுரை எழுதவேண்டும் என்ற நோக்கத்தோடு மீண்டும் அந்தத் தலங்களுக் கெல்லாம் சென்றேன்; தரிசித்தேன்; அங்குள்ள அன்பர்களிடம் பல செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்; அந்தத் தல சம்பந்தமான நூல்களேயும் பாடல்களையும் படித்தேன். என்னுடன் என் நண்பரும் நிழற்படக் கலைஞருமாகிய மாயூரம் திரு என். ராமகிருஷ்ணு அவர்களையும் இந்தத் தலங்களுக்கு உடன் அழைத்துச் சென்றேன். அவர் ஊக்கத் தோடு படம் எடுத்தார். பக்தியும் பண்பும் உடையவ ராதலின் என்னுடைய கருத்தை அறிந்து பல பல படங்களே எடுத்தார். - - கலைமகளில் இந்தத் தலங்களைப் பற்றிய கட்டுரைகளே வரிசையாக எழுதி வரலானேன். 1955-ஆண்டு ஜனவரி இதழில் தொடங்கி, 1957-ஆம் ஆண்டு பிப்ரவரி இதழில் நிறைவேற்றினேன். இருபத்து நான்கு கட்டுரைகள் வந்தன. வெறும் தல மாகாத்மியங்களாக இல்லாமல் பயணக் கட்டுரைகளைப் போல அமைத்து என்னுடைய உணர்ச்சி களையும் இடையிடையே புலப்படுத்தினேன். தலத்தைப் பற்றிய நூற் செய்திகளேயும், கர்ண பரம்பரைச் செய்தி களையும், கல்வெட்டிற் கண்டவற்றையும் பயன்படுத்திக் கொண்டேன். தேவார திருவாசகமும் பெரிய புராணமும் இந்தத் தலத்தைப் பற்றிய தெளிவை உண்டாக்கு