பக்கம்:வார்த்தை வாசல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதற்குப் பின்னர் அம்புலி காட்டல்போல், அரும்புச் சிறுவரின் அறிவுநிலை யறிந்து, கண்கவர் காட்சிக் கவிதையை முதலிலும், முழுக்கதைப் பாடலே நூலின் முடிவிலும் வைத்துள்ள போக்கு வரவேற்கத் தக்கது. உள்ளபடி சொல்கிறேன் ஒவ்வொரு பாடலும் கொள்ளுபடி ஆகுமே அன்றிக் கொஞ்சமும் தள்ளுபடி ஆகாது சாரம் இருப்பதால் ! இலக்கியம் கற்றவர் இயற்றிய இந்நூல் முழுநிலவு போன்றது, மொட்டுச் சிறுவரை நல்லவ ராகவும் வல்லவ ராகவும் ஆக்கத் தக்க நூல் அறியாமை இருளைப் போக்கக் கூடிய புத்தக வெளிச்சம்.

வளரட்டும் இந்த வெளிச்சம் வளரட்டும் இவர் புகழ் வரலாறு போலவே .

பூவண்ணன், எம். ஏ., அவர்கள் எ ழு தி ய பாட்டுத் தோட்டம்' எ ன் னு ம் குழந்தைப் பாடல்கள் தொகுப்பு நூலுக்கு 1970-இல் வழங்கிய அணிந்துரை.

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/29&oldid=645728" இலிருந்து மீள்விக்கப்பட்டது