பக்கம்:வார்த்தை வாசல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைமுயற்சி மரமாகிப் பூத்துக் காய்த்து -

விளங்குதல்போல் விளங்குவதே சிறந்த செய்யுள். மதிமுயற்சி உடையோரே இலக்கி யத்தில்

மறுமலர்ச்சி உண்டாக்கிக் காட்டக் கூடும். துதிமுயற்சிப் பாடலெனும் பக்திப் பாடல்

தொகைவளர்க்க விரும்பாத உலக நாதன், புதுமுயற்சி செய்திருக்கும் இந்த நூலில்,

புதுமைபல இருப்பதனால் பூரிக் கின்றேன்.

எல்லார்க்கும் விளங்குகின்ற வண்ணம், பாடல்

எழுதுவது மிகக்கடினம். செய்யுள் செய்வோன் சொல்சேர்க்கும் நுட்பத்தை அறியா விட்டால்

சுவைசேர்க்கும் வித்தையிலே தோற்றுப் போவான். நெல்சேர்க்கும் வயலைப்போல், குளிர்ச்சி கொண்ட

நிழல்சேர்க்கும் மரத்தைப்போல் வாயின் ஒரம் புல்சேர்க்கும் மானப்போல் புதுமை சேர்த்துப்

புகழ்பரப்பத் தெரிந்தவனே சிறந்தோன் ஆவான்.

பழநிமலை உச்சியிலே இருப்பான் சைவ

பக்தர்தொழும் வேல்முருகன் என்றும் ; கழனியிலே வேலைசெய்து கொண்டி ருப்பான்

கல்விநலம் காணுத முருகன்' என்றும் : முழுஉரிமை பெற்ருக வேண்டும்' என்றும் ;

முன்னேற்ற்ம் உழைக்காதார்க் கில்லை' என்றும் : அழுதுவரும் ஏழைகளின் துயரம் திர

அடிப்படையை நாம்திருத்த வேண்டும்' என்றும்;

சேற்றுக்

35 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/37&oldid=645745" இலிருந்து மீள்விக்கப்பட்டது