பக்கம்:வார்த்தை வாசல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளிவைக்கும் மனப்பான்மை கூடா தென்றும்

குறுக்குவழி தீதெ' என்றும் , இரவில், வெள்ளிப் புள்ளிவைக்கும் வானத்தின் மீது தோன்றும்.

புதுநிலவை, அப்பளந்தான் நீயோ!' என்றும் ; வள்ளுவனை இவ்வுலகில் வாழ வைக்க

வந்தபித்தன் நானென்றும் பாடிக் காட்டி அள்ளிவைத்துக் கொள்வோரை அதட்டு கின்ருர்.

அறம்பொருளே இன்பத்தை வாழ்த்து கின்ருர்.

சந்தனத்தை வைப்பதற்குக் கிண்ண முண்டு ; தயிரதனை வைப்பதற்குப் பானை யுண்டு ; வெந்தயத்தை வைப்பதற்குக் கலய முண்டு ;

வெற்றியினை வைப்பதற்குத் திசைகள் உண்டு ; சிந்தனைச்சந் தனக்கிண்ணம் என்னும் இந்நூல்,

தேசத்தின் வளர்ச்சிக்கு வழிகள் காட்டிப் பந்தயத்தில் வெற்றிபெறும்! எனவே இந்தப்

பாடலுக்கும் புகழுலகில் வரவேற் புண்டு 1

கவிஞர் ஐ. உலகநாதன் அவர்கள் எழுதியசந்தனக் கிண்ணம்’ என்னும் கவிதை நூலுக்கு 1966-இல் வழங்கிய அணிந்துரை.

36.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/38&oldid=645747" இலிருந்து மீள்விக்கப்பட்டது