பக்கம்:வார்த்தை வாசல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நதிவழியில் ஒடங்கள் போதல் போலும்,

நல்வழியில் நடந்துசெல்வோர் போலும், செய்யுள் விதிவகையில் பாடல்பல எழுதி, நல்ல

வெற்றிக்கு வழிதேடி யுள்ளார். மேலும் புதுவகையில் பாடல்பல தீட்டிக் காட்டிப் -

புகழ்சேர்க்க முயன்றுள்ளார். தொண்டை தன்னில் சதைவளர்ந்தால் என்னுகும் ? குடத்தி லுள்ள

தண்ணிரில் எண்ணெய்யேன் கலக்க வேண்டும் ?

நீதிநெறி விளக்கமெனும் பழைய நூலில்

நீதிகளே அதிகமுண்டு. சோதி வாணன் சாதனைக்கோர் அடையாள மாக நிற்கும்

சத்தான இந்நூலில், இந்நூற் ருண்டின் காதல்நெறி விளக்கங்கள் அதிக முண்டு 1

கட்டிலுக்கும் தொட்டிலுக்கும் பாட லுண்டு. நூதனங்கள் இக்கவிதை நூலி லுண்டு. - நுணுக்கமுள்ள பாடல்பல இதிலே உண்டு.

இச்சைதரும் இளம்பருவக் காதல் வாழ்க்கை

இனிப்பதுபோல் இனிக்குமிந்தக் கவிதை நூலில், பச்சரிசிச் சிந்தனையோ, கசப்பு மிக்க

பாகற்காய்ச் சிந்தனையோ சிறிது மில்லை. மெச்சுகின்றேன் மெச்சுகின்றேன் நூலி லுள்ள

மின்னலெனும் கவியை மிக மெச்சு கின்றேன். நிச்சயமாய் இந்நூலின் மூல மாக -

நீண்டபுகழ் பெறட்டுமென வாழ்த்து கின்றேன்.

பேராசிரியர் இரா. சோதிவாணன், எம். ワ・ பி. எல்., அவர்கள் எழுதிய இற்றையடிய் பாதை’ என்னும் கவிதை நூலுக்கு 1975-இல் வழங்கிய அணிந்துரை. <r.

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/40&oldid=645751" இலிருந்து மீள்விக்கப்பட்டது