பக்கம்:வார்த்தை வாசல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலுப்பைமரம் கோடைவரும் நாளில் பூத்தால்,

இலவமரம் அப்போது பூப்ப தில்லே. அலுப்புவரும் நேரத்தில் உறக்கம் வந்தால்,

ஆசையெழும் போதுறக்கம் வருவ தில்லை. மலேப்பகுதி நாட்டில்வாழ் அன்பா னந்தன்

வடித்திருக்கும் நயனங்கள் எனுமிந் நூலின் தலைப்புகளைப் படித்தாலே வீரம் பொங்கும்

தன்மானப் பேருணர்ச்சி உளத்தில் தங்கும்.

வாகையொன்றும், வஞ்சிமர மொன்றும் சேர்ந்து வனத்தினிலே வளர்ந்துவரக் காணு கின்ருேம். காகமொன்றும் புருவொன்றும் கூடி வாழக்

காணுகின்ருேம் நாமிதனைக் கண்டி ருந்தும், தாகமென்றும் வேர்வையென்றும் வெவ்வே ருகத்.

தனித்திருப்ப தேனென்று கவிஞர் கேட்கும் நாகரிகப் புதுக்கேள்வி நல்ல கேள்வி

நம்நாட்டின் மறுமலர்ச்சிக் கேற்ற கேள்வி !

அரும்பாகிப் போதாகி மலரு மாகி

அம்மலரே அதற்குப்பின் பூவு மாகும். பெரும்பாலோர் மலராகிப் பூப்ப தில்லை.

பெருங்கவிஞன் பூவாகா திருப்ப தில்லை. விருந்தமிழ்தம் என்ருலும், தமிழை யன்றி.

வேறெதையும் விரும்பாத அன்பா னந்தன். வருங்காலப் பெருங்கவிஞர் என்று ரைப்பேன் வளர்புகழுக் கிந்நூலே சாட்சி என்பேன்.

கவிஞர் சா. ஆ. அன்பானந்தன் அவர்கள் எழுதிய நயனங்கன் என்னும் கவிதை நூலுக்கு 1979-இல் வழங்கிய அணிந்துரை.

42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/44&oldid=645759" இலிருந்து மீள்விக்கப்பட்டது