பக்கம்:வார்த்தை வாசல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புமிகு நரிவிருத்தம் என்னும் நூலே

திருத்தக்க தேவரது முதல்நூ லாகும். நறுக்குதற்கோர் ஆயுதமாம் இந்த நூலே -

நரிப்பையூர் கசேந்திரனின் முதல்நூ லாகும். சிறைப்படுத்தும் சாதிமத பேதம் ; மற்றும்

தீண்டாமை இவற்றையெல்லாம் பெரியார் போன்று: குறிப்பெடுத்துக் கண்டிக்கும் இந்நூல், மற்றேர் குமரேச சதகத்தைப் போன்ற தாகும்.

தெருவெல்லாம் சாமியுண்டு சின்ன பாப்பா திரும்பியும்நீ பார்க்காதே சின்ன பாப்பா அருவருப்பாய் அவையிருக்கும் சின்ன பாப்பா

அலட்சியம்நீ செய்திடடி சின்ன பாப்பா பெரியாரின் கொள்கையினை சின்ன பாப்பா

wo பின்பற்றி நீநடப்பாய் பாப்பா' என்று சரியான சீர்திருத்தப் பாடல் ஒன்றைச் -

சமுதாய நலங்கருதிப் பாடி யுள்ளார்.

தொண்டுசெய்து வருவோர்க்கும் ; உழவு செய்யும்

தோழர்கட்கும் இடந்தருதற் கிசைந்தி டாமல்,

உண்டுகளித் திருப்போர்க்கும் ; ஒவ்வோர் நாளும்

- ஊர்க்கொள்ளை யடிப்போர்க்கும் , தீமை செய்யும்.

குண்டர்கட்கும் : ஆங்காங்கே கோயில் கட்டும்

குழுவினர்க்கும் இடமளித்த நிலத்தைப் பார்த்து,

மண்டினிந்த நிலமேயென் றழைத்தி டாமல்

மடநிலமே ! என்றழைத்துச் சாடு கின்ருர்.

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/51&oldid=645774" இலிருந்து மீள்விக்கப்பட்டது