பக்கம்:வார்த்தை வாசல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடுபுகழ் திருத்தக்க தேவ ருக்கு

நரிவிருத்தம் எனும் நூலே முதல்நூ லாகும். ஆடகப்பொன் போன்றவராம் கவிம ணிக்கோ

அழகம்மை விருத்தம்தான் முதல்நூ லாகும். மூடுபனிப் பகைவர்தமை எழுத்தால் பேச்சால்

முறியடிக்கும் இவர்க்கிதுவே முதல்நூ லாகும். காடுபடும் பொருளைப்போல் சிறப்பு மிக்க

கவிதைபல படைத்துள்ளார். இவரிந் நூலில்.

சிலம்புதந்த பெருங்கவிக்கோ சேரன் தம்பி

திங்களைத்தான் முதல்முதலில் வாழ்த்தி யுள்ளார். புலம்புகின்ற சமுதாய மக்கட் கெல்லாம்

புத்திசொல்லும் இக்கவியோ, வையத் துக்கே தலைவிளக்காய் விளங்கும்செங் கதிரை, இன்பத்

தமிழ்க்கவியால் முதன்முதலில் வாழ்த்து கின்றர். கலையுலகப் பெண்ளுெருத்தி இந்த நூலின் காகிதத்து மேடையிலே ஆடு கின்ருள்.

விதைமுயற்சிக் கவிதைகளை இந்த நூலில்

விதைத்துள்ளார். பகுத்தறிவைப் பரப்பி யுள்ளார்.

சதைமுயற்சிக் கவிதைகளே இளைஞர் கட்குத்

- தந்துள்ளார். போர்ப்பரணி பாடி யுள்ளார்.

கதைமுயற்சிக் கவிதைகளின் மூல மாகக் r

கற்பனையை அற்புதமாய்க் காட்டி யுள்ளார்.

புதுமுயற்சிக் கவிதைபல படைத்துக் காட்டிப்

புகழுக்கோர் பாத்திரமாய் விளங்கு கின்ருர்,

. கவிஞர் பட்டுக்கோட்டை இராசேந்திரன் அவர்கள் எழுதிய .பொழுது புலர்ந்தது என்னும் கவிதை நூலுக்கு 1981-இல் வழங்கிய அணிந்துரை. . . . - . *

52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/54&oldid=645779" இலிருந்து மீள்விக்கப்பட்டது