பக்கம்:வார்த்தை வாசல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெல்முற்றம் என்பதெது ? வயல்தான் : உப்பு

நீர்முற்றம் என்பதெது : கடல்தான் ; ஆய்ந்தோர் சொல்முற்றம் என்பதெது ? நிகண்டு நூல்தான்.

தூங்காத வெள்ளைநிலா எட்டிப் பார்க்கும் நல்முற்றம் நிலாமுற்றம் என்ருல், வேலூர்

நாராய ணன்படைப்பாம் இந்த முற்றம் எல்லார்க்கும் பயனளிக்கும் பாட்டு முற்றம்

இவர் கவிதை நிலாமுற்றம் எழுத்து முற்றம்.

மலராய்ந்து பூத்த்ொடுத்தல் போன்று வார்த்தை

மலராய்ந்து பாமாலை தொடுக்க வல்ல தலைசிறந்த இக்கவிஞர் எழுபத் தாறு , .

தலைப்புகளில் நிலாமுற்றம் என்னும் நூலைப் பலர்புகழ்ந்து பாராட்டத் தக்க வாறு :

படைத்துள்ளார் : மானுடத்தைப் பாடி யுள்ளார். கலைஞர்களை அறிஞர்களைப் பற்றி யெல்லாம்:

கறுப்புச்சூ ரியக்கவிஞர் பாடி யுள்ளார்

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/59&oldid=645789" இலிருந்து மீள்விக்கப்பட்டது