பக்கம்:வார்த்தை வாசல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டோடே கனத்தோடே வாழ்வார் தம்மைக்

கண்ணுேடே கருத்தோடே இருப்பார் தம்மைப் பட்டோடே பணியோடே திரிவார் தம்மைப்

பாராட்டும் இந்நாளில் இவரோ, தங்கத் தட்டோடே தனத்தோடே வாழ்ந்தி டாமல்

தமிழோடு வாழ்பவர்கள் தம்மைப் பற்றி, எட்டாத மேல்நிலையில் இருக்கும் சான்ருேர்

இவர்களன்ருே எனவியந்து பாடி யுள்ள்ார்!

ஆங்காங்கே குழந்தைகளே எட்டிப் பார்க்கும்

அரும்புமொட்டுக் கவிதைகளும் சமுதா யத்தில்

தேங்கியுள்ள தீமைகளேக் கண்டிக் கின்ற

சீர்திருத்தக் கவிதைகளும் : புகுத்தப் பெற்ற

சாங்கியத்தைச் சடங்குகளைத் தண்டிக் கின்ற

சாட்டையடிக் கவிதைகளும் இடம்பெற் றுள்ள

மூங்கில்முத்துப் புத்தகத்தில் புதுமை என்னும்

முத்திரையைப் பதித்துள்ளார் என்றன் நண்பர்.

இந்தநாள் அந்தநாளென் றெழுது வோம்நாம்

இழைத்தநாள்' என்ருெருவன் எழுத லானன். பொந்து மரச் சோலைதனில் உலவும் வண்டைப் :பூநக்கி’ என்ருெருவன் எழுத லானன். பந்தயப்பாட் டரங்கத்தில் வெற்றி பெற்ற

பாவலராம் நாவலராம் இவரோ, காமச் சந்துவழி யாய்ப்பிறக்கும் குழந்தை தன்னேச்

சதைக்கல்வெட் டென்கின்ருர் புதுமை யாக..

58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/60&oldid=645791" இலிருந்து மீள்விக்கப்பட்டது