பக்கம்:வார்த்தை வாசல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலர்ந்துபயன் படுகின்ற மலரைப் போன்றும் :

மணந்துபயன் படுகின்ற மங்கை போன்றும் : புலர்ந்துபயன் படுகின்ற கதிரைப் போன்றும் ;

பொழிந்துபயன் படுகின்ற மழையைப் போன்றும்: சிலந்துபயன் படுகின்ற தேனைப் போன்றும் :

காப்பியங்கள் பயன்படுதல் வேண்டும் ; நாட்டில் தலைசிறந்த காப்பியங்கள் தோன்று மாயின்

தாய்மொழிக்குப் புதுப்பெருமை வந்து சேரும்.

கண்ணகியின் கண்ணிரை நெருப்பாய் மாற்றிக்

காட்டியதோர் காப்பியத்தை இளங்கோ தந்தார்;

பண்பட்ட திருத்தக்க தேவர் என்பார்

பாட்டாலே கோட்டையொன்று கட்ட லாளுர் ;

எண்ணற்ற பாக்கள்தந்த பாவின் வேந்தர்

எழுச்சிமிகு காப்பியங்கள் படைத்துத் தந்தார் :

தண்ணமுதப் பெருங் கவிஞர் சங்கர் லிங்கம்

- தமிழ்ப்பாவை காப்பியத்தை வழங்கி யுள்ளார்.

60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/62&oldid=645795" இலிருந்து மீள்விக்கப்பட்டது