பக்கம்:வார்த்தை வாசல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமரையின் மொட்டைப்போன் றமைந்தி ருக்கும் தனித்தீவாம் இலங்கையினே அந்த நாளில் பூமிபுகழ் இராவணனும், மற்றை யோரும்

பொறுப்போடும் சிறப்போடும் ஆண்டு வந்தார். நாமிந்த வரலாற்றை மறந்து விட்டோம்.

நண்டுமொழிச் சிங்களரை நம்பிக் கெட்டோம்: சாமிகளை நினைக்கின்ருேம். நமது நாட்டின்

சரித்திரத்தை நாம் நினைத்துப் பார்ப்ப தில்லை.

என்றிந்தக் கவிராயர் வருந்து கின்ருர் -

இத்தகைய தோர்வருத்தம் எனக்கும் உண்டு. நன்றியினை மறந்தாலும் அஃதே போன்று,

நாட்டினது வரலாற்றை மறந்திட் டாலும், குன்றைப்போல் குன்றிப்போய் விடுவோம். வாழ்வில்

குறிக்கோளே இல்லாமல் வாழ்ந்தோ ராவோம். அன்றுமுதல் இன்றுவரை நடந்த வற்றை

அறிந்துகொள்ளல் அவரவரின் கடமை யன்ருே ?

தங்கம்மா தவமிருந்து பெற்ற மைந்தர்

தமிழிழ விடுதலைப்போர்க் களத்தில் வந்து சிங்கத்தின் சீற்றத்தோ டுலவும் வீரர்

தீட்டியுள்ள பாடல்களைப் படிப்போ மாயின் அங்கத்தில் சூடேறும்; கிழவர் கட்கும்

ஆவேசம் உண்டாகும். விரிந்த வானில் தொங்கிக்கொண் டிருக்கும்வெண் ணிலாவி னுக்கும்

சூடேறும்; சூரியய்ை அதுவும் ம்ாறும்.

71.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/73&oldid=645818" இலிருந்து மீள்விக்கப்பட்டது