பக்கம்:வார்த்தை வாசல்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூட்டாத வில்லதுதான் வான வில்லாம்

பூமிக்கும் காதுண்டாம் அதுதான் புற்ரும் திட்டாத அம்பதுதான் மழைநீர்க் கோடாம் தீக்குடுமி தான்புகையாம் என்றிவ் வாறு நாட்டாண்மைக் காரன்மகன் தரங்கம் பாடி

நகரத்துப் பெரும்புலவன் பாட லானன். மீட்டும்யா ழிசைவிரும்பும் இவரோ ஈர

மேகத்தின் பாலதுதான் மழையென் கின்ருர்.

எண்கொடுத்தால் எழுத்துவரும்; பருவ காலம்

இடங்கொடுத்தால் மேகம்வரும்; ஒருவ் னுக்குப் பெண்கொடுத்தால் உறவுவரும் கலைஞன் என்னும்

பேர்கொடுத்தால் சிறப்புவரும்; பக்தர் இங்கே மண்கொடுத்தால் குங்குமமே வருமாம்! என்ன -

மதிவீனம்! ஏமாற்றும் வித்தை! வீட்டில் எண்ணெயில்லை, அரிசியில்லை; உப்பு மில்லை,

எதுகொடுத்தால் இவைகிடைக்கும் எனக் கேட்கின்ருt.

கல்லறையின் அருகினிலோர் கவிஞன் நின்று

கண்ணிர்விட் டழுகின்ருன் என்னும் பாடல் மல்லிகைப்பூச் செண்டன்று பெரியார் தொண்டன் மனக்குமுறல் வைதீகப் பாதை நோக்கிச் செல்வோரைக் கண்டிக்கும் கவிதை கண்ணிர்த்

திவலைகளே வாய் திறந்து பாடும் பாடல் இல்லையில்லை எனச்சொல்லி வளர்ந்தோர் இன்ருே

இருக்கின்ற தென்பானேன்?...எனக்கேட் கின்ருர்.

.75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/77&oldid=645825" இலிருந்து மீள்விக்கப்பட்டது