உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாளும் கேடயமும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 யட்டது. அந்த நேரத்தில் தமிழகத்தை மாத்திரம் கணக்கிலே எடுத்துக்கொண்டு பார்த்தால் -ஒவ்வோர் ஆண்டும் தரப்பட்ட மத்திய அரசின் உதவி என்ற வகையில் எடுத்துக் கொண்டு பார்த்தால்- ஐந்தாண்டுக் காலத்தில் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நம்முடைய மாநிலத்திற்கு தரப்பம் டிருக்கின்ற தொகை இருநூறு கோடி ரூபாயாகும். இந்த இருநூறு கோடி ரூபாயில் 70 சதவிகிதத்தை நாம கடனாகத் திருப்த் தரவேண்டும். அதைத் திருப்பித் தருவத எப்படியென்றால், அடுத்த ஆண்டு நாற்பது கோடியோ--ஐம்பது கோடியோ தகும் போது நாம் திருப்பித் தர வேண்டிய கடனைச் கழித்துக் கொண்டுதான் மீதத்தைத் தருவார்கள்; அந்த வகையில் நாம் அந்தக் கடனைத் திருப்பித் தந்தாக வேண்டும். இப்படி நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் -- ஐ தாண்டுக் காலத்தில் 70 சதவிகிதம் கடனாகவும். 30 சதவிகிதம் மானியமாகவும் தந்த தொகை சற்றொப்ப இருநூறு கோடி ரூபாயாகும்! இரண்டாண்டுக் காலமாகியும்..... ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம், 'மிகப் பெரிய பிரய மாண்டமான திட்டம்' என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டு- ஐம்பத்து மூவாயிரம் கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட போது- நாமெல்லாம் மகிழ்ச்சியடைந்தோம் ; ஏனென்றால் 'இரண்டு மடங்குக்கு மேலாக ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத் திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யத் தொடங்குகிறது ஆகவே, மாநிலங்களின் தேவைகள் முழுமையாக நிறைவ செய்யப்பட இயலும்' என்றெல்லாம் நினைத்தோம்! இந்தத் திட்டம், தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் ரண்டு நாட்கள் விவாதிக்கப்பட்டது ; இப்படி விவாதித்து இரண்டாண்டுக் காலமாகிறது ; இந்த இரண்டாண்டுக் காலத்திற்குப் பிறகு, ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கதி என்ன என்று தெரியவில்லை! காட்சி மறைந்ததற்குக் காரணம் ? - ஐந்தாண்டுத் திட்டம்-ஒவ்வோர் ஆண்டுத் திட்டம் என்கின்ற வகையில்தான் நிதியை, ஒவ்வொரு மாநிலத்திற் கும் ஒதுக்குகின்ற அளவிற்குச் சுருங்கிப் போய் இருக்கிறது ! !