பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரெ. முத்துக்கணேசன் 89 அழகப்பா கல்லூரியில் நடைபெற்ற கலைவிழாக் கவியரங்கத்தில் பொழுதிடைத் தெரியிற் பொய்யே காமம் " என்ற குறுந்தொகைப் பாடலின் தலைப்பில் பாடிய கவிதைகளில் சிலவற்றை ஈண்டு தருகின்றேன். முதலில் குறுந்தொகையை வாழ்த்துகின்றார் கவிஞர். நிலந்தழைக்க உயிரெழுந்து நாட்கள் செல்ல நினைவெழுந்து நடமாடக் காலம் ஏகப் புலந்தழைக்க உணர்வெழுந்து வேற்று நாட்டில் பொன்றாத பழம்பாடல் தோன்றா முன்னர்க் குலந்தழைக்க எழுந்திட்டார் தமிழர் என்பார் குறைவகற்றும் நிறைகவிதை தமிழிற் கண்டார் நலந்தழைக்கச் சங்கத்தார் வகுத்த ஏடாம் நல்லமுதக் குறுந்தொகைக்கே ஞாலம் ஈடோ அடுத்து, கவிஞரக்கு ஆசிரியராகத் திகழ்ந்த பேராசிரியர். க. தேசிகனாரை வாழ்த்துகின்றார். தேசிகனாரின் பேச்சில் மூச்சில் எல்லாம் கவிதைகள் நடனமாடும். சொல்வளம் கருத்து வளம் மிக்க கவிதைகளைப் படைக்கும் திறன்மிக்கவர். அடுத்து வள்ளல் அழகப்பரை வாழ்த்தும் பாங்கில் என்னகத்துக் கவிப்பொருளை எழிலறமாம் கதிர்வீசும் இளஞாயிற்றைத் தன்னகத்துச் சார்ந்தாரைத் தானாகக் கண் ம் திங்கள் தன்னைத் தென்னகத்துப் புகழோங்கத் தெளிஞானக் கலைக்கோயில் கட்டு வித்த மின்னகத்து மென்முகிலை அழகப்ப வள்ளலையே வாழ்த்தி வாழ்வாம் என்ற பாடல் அமைந்து வள்ளலை நினைக்கச் செய்கின்றது. அடுத்துப் பாட்டரங்கத்தின் தலைப்பாக அமைந்த அடிகளை, அருளிய அள்ளுர் முல்லையார் என்ற சங்கப் புலவரை கரும்புநிகர் பொற்கொடியாள் நடன மாடக் கத்துரி புனுகுசவ் வாது வீச அரும்பும்இள மாதொருத்தி அருகி ருக்க அள்ளுசுவை இதழ்த்தேனைப் பருகும் பேற்றை