பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 வாழும் கவிஞர்கள் இவையும் தாய்க்குலத்தைப் பற்றிய அற்புதமான பாடல்கள், பெண்ணினத்துக்குச் சிறப்புச் சேர்ப்பன. பொறுமைக்குச் சான்றாய்ப் பூமியைக் காட்டுவர் புலவர் பொறையுடைமைக்குப் பூமிப்பிராட்டியை எடுத்துக்காட்டாகக் கொள்வர் வைணவப் பெருமக்கள். 4. மானிட தேயம்: இராம காதையில் கம்பன் ஆறுகொள் சடிலத் தானும் அயனும்என்று இவர்கள் ஆதி வேறு:ன குழுவை யெல்லாம் மானுடம் வென்ற தம்மா என்று பாடினான். அவனுக்குப் பிறகு தமிழ்க் கவிஞர்களில் எவரும் மனித இனத்தின் உயர்வை அவ்வளவாகச் சிறப்பித்துப் பாடவில்லை. கவிஞர் குலோத்துங்கன் அந்த இடத்திற்கு வருகின்றார். மானிடத்தைச் சிறப்பித்துப் பாடுகின்றார்.நான் ஒருவனே போதும் என்ற கவிதையில் கூறுவது, - என்ன வரம்வேண்டும் என்றென்னை முன்னழைத்துச் சொன்ன மொழிகேட்டேன் தொழுதிட்டேன் எந்நாளும் பன்னெடுநாள் ஆசைபகர்கின்றேன் பார்வணங்கும் இறைவனே நின்படைப்பில் இருக்கின்ற எண்ணிறந்த குறையெல்லாம் நீக்கிக் குவலயத்தை யான்விழையும் வடிவில் அமைக்கின்ற வாய்ப்பெனக்குத் தாராய்ஒர் மெய்ப் டொகுளொன்று தேடும் புனிதப் பணியதற்குக் கூட்ட மெ.தற்கு? கொடிபிடித்துப் பின்தொடர்வோர் ஆட்டமேன் வேண்டும்? அரிய பொருளெதையும் தேடி யளிக்கச் சிலர்போதும் மற்றதனைக் கூடிச்சுவைக்கக் குவலயத்தை தாமழைப்போம் என்பது கவிஞர் குலோத்துங்கனின் எண்ண வளர்ச்சியில் மணிமுடியான பகுதியிது யாதும் ஊரே என்ற சங்ககால எண்ணத்தில் தோய்ந்த இப்பெருமகனார், மானிடர் எம்மி னத்தர் மண்ணெலாம் எமது தேயம் என்று கூறுவார். இந்த எண்ண வளர்ச்சி தத்துவங்கள் சமயங்கள் அறிவு வாழ்வைச் சார்ந்தவைஎன் றறிந்தவெலாம் சலித்தெ டுத்தேன்