பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். வா.செ. குழந்தை சாமி 42: முத்தமிழின், தமிழினத்தின் மானிடத்தின் முன்னேற்றம் என்னை ஆளும் முழுமை கண்டேன் எப்பொருளும் எவ்வுறவும் மானிடத்தின் ஏற்றம்போல் என்மனத்தை ஈர்த்ததில்லை ஒப்பரிய பயணமிது, வாமனர்யாம் உம்பர்பதி ஊடுருவி உயரச் செல்வோம் என்ற கவிதைகளாக உருவெடுக்கின்றது. கவிஞர் கூறும் மானுடம் யாது? மானிடயாக்கையை உடையவர் யாவரும் மனிதரல்லர். உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே என்பது தொல்காப்பியர் கருத்து. இதனையொட்டியே வள்ளுவர் பெருமான் மனித உடலையுடையவர் அனைவரும் மானிடர் அல்லர் என்றும், மனிதப் பண்புகள் இல்லாதவர் மரப்பாவை ஆகிவிடுவர் என்றும் கூறிப் போந்தார். இதுகாறும் கூறியவற்றுக்கெல்லாம் விரிவுரைபோல் கவிஞர் கூறுவது. வயிற்றினில் மானிடம் வாழுவ தில்லை வயிற்றை மறந்தும் வாழ்வொன் றில்லை செயற்றிறம் தவிர்ந்த சிந்தனை யில்லை சிந்தையும் தோளும் சேர்ந்தது மனிதம் உளவலி யல்லது ஒருவலி யில்லை, அளவிடற் கரியதோர் அற்புதம் மனிதன் அளப்பதும் ஆய்வதும் அறிவதும் மனிதம் கடவுளும் தேவரும் யாமெனும் சொல்லில் கற்பனை, மடமை பின் கர்வ மொன் றில்லை திடமுடன் குவிந்த சிந்தையும் செயலின் திறமும் சேர்ந்தால் தெய்வமும் ஆவோம் இக் கவிதைகளில் பொதிந்துள்ள கவிஞரின் கற்பனையும் எண்ண வீச்சும் நம்மை வியக்க வைக்கின்றன. சிந்தையும் தோளும் என்பது எண்ணமும் செயலும் ஆகும். மனவுறுதியுடன் செயற்பட்டால் செயல்திறம் வளரும். பிறிதோரிடத்தில் இதே கருத்தை வேறு வகையில், தத்துவம் செய்வ தென்ன? சரித்திரம் படைப்ப தென்ன? வித்தகம் தருவ தென்ன? வினைசெயா வீணர் கையில்