பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா.செ. குழந்தை சாமி 423 சோதனைத் தீயில் வெந்து நிமிர்ந்தவர் தோல்வியை ஏற்பதிலை - அட சாதனைப் பாதையில் முன்னடி வைத்தவர் தாகம் தணிந்ததிலை. கேள்விகள் ஆயிரம் கேட்பவன் மானிடன் கேட்டவை யாவினுக்கும்-தேடி வாழ்வினில் பதில்சொல மானிட நல்லது மற்றவர் யாருமிலை என்ற கவிதைகளில் ஆள்வினைத் தத்துவத்தைக் காணலாம். 4. சான்றோர்கள் 'தனக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே. உண்டாலம்ம இவ்வுலகம்' என்று கூறுவான் புறநானுற்றுப் புலவன். சங்கநூல்களில் இப்படிப் பல எண்ணங்கள். சுந்தர மூர்த்தி, நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் முதலியோர் கருத்துகளை ஒட்டிப் பின்னர் வந்த புலவோர் தம் காலத்து வாழ்ந்த பெரியோர்களை நினைவு கூர்கின்றனர். கவிஞர் குலோத்துங்கனும் இம்மரபை ஒட்டிச் சிலரைத் தம் கவிதைகளில் நினைவு கூர்கின்றார். தந்தை பெரியார் பூத உடலைத் துறந்தாலும் புகழுடம்புடன் தமிழர் மனத்தில் நிலையான இடம் பெற்றுத் திகழ்கின்றார். அடியார்கள் உள்ளத்தில் ஆண்டவன் திகழ்தல் போலப் பெரியார் இருப்பதால் அவரைப் பற்றிக் கவிஞர் பாடிய பாடல்களுள் மூன்று பாடல்களைக் காட்டுவேன். தென்னகத்தின் ஒருதலைவர் ஒருது றாண்டு திரவிடத்தின் வளர்ச்சிக்கே தன்னைத்தந்த தன்னிகரி லாத்தமிழர் இந்த மண்ணில் சரிதையிலோர் புதுமனிதர் இருண்ட வானில் மின்னலெனத் துலங்கியவர் வளர்ந்து யாங்கும் விரிகின்ற சுடரான வேந்தர், சூழும் தன்னலத்தின் கோட்டையெலாம் ஒருங்கு வீழச் சாய்த்திட்ட பெரியாரே சிலையாய் நின்றார். முற்பட்ட குலங்கண்டார், தாழ்த்தப் பட்ட முதுகுடியில் இனங்கண்டார் சமுதா யத்தின் பிற்பட்ட குலங்கண்டார் உயர்வு தாழ்வுப் பேதங்கள் நீக்குவதற் காள வந்தார்