பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபுக் கவிதை 5 திறனாய்வாளர்கட்குத்தான் கவிதையின் தரம் தெளிவாகப் புலனாகும் காலஞ் சென்ற இரசிகமணி டி.கே.சியிடம் இத்தகைய திறன் அமைந்திருந்ததை அவர் பேச்சை நேரில் கேட்டவர்கள் அறிவார்கள். மேற்கூறியவற்றால் கவிதை அல்லது பாட்டு இன்னதென்பது தெளிவாகும். பாட்டு இன்னதென்பதை இலக்கண விதிபோல் ஒரு வரையறைக்குள் அடக்கிக் கூற இயலாது போயினும் பாட்டு இன்னதென்பதை ஓரளவு மனத்தால் உணர முடிகின்றது. "உணர்ச்சி. கற்பனை, ஒலிநயம், அணி நலன்கள். தொடைநயம், சுவைகள் x- 冰 క్షీ ! r. ۔ אף- ox. + முதலியவை அமையச் செந்தமிழ்ச் சொற்களால் நல்ல வடிவத்துடன் 3 & அமைவதே கவிதை அல்லது பாட்டு ஆகும்" என்று சொல்லி வைக்கலாம். அணி நலன்கள் பாட்டில் அமையினும் அமையலாம், அமையாதும் போகலாம். அவை அமையவேண்டும் என்ற நிபந்தனையொன்றும் இல்லை. ஆனால் கவிதை வாழ்க்கையின் உண்மைகளை மன்பதைக்கு என்றும் தோன்றத் துணையாக நிற்கும் உண்மைகளை உட்கிடக்கையாகக் கொண்டு நிற்க வேண்டும். அப்படியாயின் அவை முந்திரிக் கொட்டைபோல் நீட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்பது பொருளன்று. அவை பாவிகமாக கவிஞனுடைய மனோபாவனையாக அமைதல் சாலச் சிறப்புடைத்து என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். கற்பனை: கற்பனை என்பது புலன்களை நேரே ஒரு பொருளை அநுபவியாத காலத்திலும் அந்தப் பொருள்களை நினைவிற்குக் கொண்டு வந்து அப்பொருளினிடத்து மீண்டும் அனுபவத்தை ஏற்ற வல்ல ஒருவகை ஆற்றல் கற்பனையைப் பற்றி முடிந்த முடிபாக ஒருவரும் இதுவரை வரையறுத்துக் கூறவில்லை. கூற முடியும் என்று நமக்குத் தோன்றவில்லை. இரஸ்கின் என்ற மேனாட்டுத் திறனாய்வாளர். " கற்பனையின் தத்துவம் அறிவுக்கு எட்டாதது, சொற்களால் உணர்த்த முடியாதது. சொற் கோட்டைக்குள் அடங்காதது, அதன் பலன்களைக் கொண்டே அஃது அறியப் படுவதொன்றாகும்" என்று குறிப்பிடுவர். எடுத்துக்காட்டு ஒன்றால் இதனை விளக்கலாம். தங்கம் உருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ என்பது பாரதியாரின் குயிற்பாட்டடிகள். இவை காலைக் கதிரவனை வருணிக்கும் அற்புதச் சொல்லோவியம். இளஞ்சூரியனின்