பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{ வாழும் கவிஞர்கள் பொய்யில் உள்ளம் டொங்கும் புனித கையும் காலு:மேன்கடிதே ஆட்டுவாய் மெய்யில் உலகில் மேவும் மாசுகள் பைய வரவே பகைத்தே உதைத்தேன் கன்னல் தன்னிலும் களிப்டை ஈவோய் என்னோ அங்கும் இங்கும் பார்ப்பாய்? என்னுடைஇருப்பிடம் எச்சூழ்நிலையென முன்னும் பின்னுமாய் முயன்றே பார்ப்பேன். வின விடையாக அமைந்த இக்கவிதைகளுக்கு விளக்கம் தேவை இல்லை. இரசவர்க்க மாங்கனியின் சாறு போல் இனிப்பதை உணர்ந்து மகிழ்கின்றோம். கண்ணன், முருகன் இவர்கள் படங்களில் காணப்பெறும் குறு மூரல் நம்மை மகிழ்விக்கின்றது. அங்ங்னமே இயற்கையின் புன்னகை விளைவிக்கும் இன்பம் சொல்லுந்தரமன்று.புன்னகை என்ற தலைப்பில் காணப் பெறும் ஆறு பாடல்களும் ஆறுமுகனின் முகத்தில் தவழும் புன்னகைபோல் நம்மை உடல் சிலிர்க்க வைக்கின்றது. விண்னெலாம் துளைத்த இடிபோல் வேதனை குடையும் நெஞ்சப் புண்னெலாம் தீர்க்க உன்றன் புன்னகை ஒன்று போதும் நஞ்செலும் வஞ்ச கத்தால் தலியுமென் உளப்புண் ஆறக் கொஞ்சியே வந்த நின்றன் குறுநகை ஒன்று போதும் மன்னுவெங்கொடுமையாலே வாழ்வெலாம் தொடர்ந்து வாட்டும் இன்னலைத் துளைக்க உன்றன் இளநகை ஒன்று போதும் இவற்றைப் படித்து அநுபவிக்கும்போது பராசக்தியைக் குழந்தையாகப் பாவித்துப் பாரதியார் படைத்த கண்ணன்-என்குழந்தை' என்ற பாடல்களைப் படித்து அநுபவித்த இன்பம் நினைவிற்கு வருகின்றது. கவிஞர் இயற்கையழகில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து ஏங்கி நிற்பதாக நான்கு பாடல்கள். எழுதியுள்ளார் அவற்றில் ஒன்று. தண்ணமுதப் பைந்தமிழில் தாவிவரும் கடலலையில் மண்ணணைந்த பசும்புல்லில் வானொளிரும் செங்கதிரில்