பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13: வாழும் கவிஞர்கள் செய்கின்றார் கவிஞர். பிஞ்சு மனது லஞ்சு பொருளுறப் பேணிப் புகட்டுவோர்யார்? - தன்னைத் தஞ்ச மெனவருங் கொஞ்சு கிளிகளைத் தாங்குதல் லாசிரியர். கேள்வி முளைத்தெழும் பாலர் உணர்வினைக் கிளைத்தெழச் செய்பவர்யார்? - தன்னைச் சூழ்ந்து முழக்கிடும் சிறுவர்க் கிதமெனச் சொல்லுதல் லாசிரியர். பாரில் பொறுமையை யுளத்தில் நிறுத்திய பண்புடைப் பெரியவர்யார்? - தரு நூறு குழந்தைகள் கூறு மொழிகளை தேர்படக் கொள்ளுமவர் ஏணி யிவரெனத் தோணி இவரென் இடர்புகழ் பெற்றவர்யார்? - உடல் கூனி வளமது குறுகி வாழ்வினிற் கொடுந்துயர் கொள்ளுமவர் எனப்பலவகையாகப் பாடல்களில் காட்டுகின்றார். இறுதிப் பாடலில் காட்டுதல் போல் இன்று ஆசிரியர் இல்லை. நல்ல ஊதியம் பெற்று ஏறுபோல் பீடுநடை போடுகின்றார்கள். பாவேந்தர் : இவரைப் பற்றி கவிக்குயிலே என்ற தலைப்பில் நான்கு பாடல்கள் உள்ளன. நான்கும் அற்புதமானவை. பாவேந்தர் திருநாடு அலங்கரித்ததைக் குறித்து இரங்கிப் பாடியவை. அவற்றில் ஒன்று தமிழ்நாட்டில் இளஞ்சோலை உள்ள மட்டும் தமிழ்க்குயிலா யங்கிகுந்து பாடல் சேர்ப்பாய் தமிழ்நாட்டில் மலர்க்கூட்டம் மல்கு மட்டும் தமிழ்த்தேரீையாய்வந்து தேனைச் சேர்ப்பாய் தமிழ்நாட்டில் இளந்தென்றல் வீசு மட்டும் தமிழினிமை கலந்ததிலே குளிராய் நிற்பாய் தமிழ்நாட்டில் இயற்கையழ கிருக்கு மட்டும் தனியழகின் சிரிப்பாக நிற்பாய் நீயே.