பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 வாழும் கவிஞர்கள் சவகர்லால் கதிரவனை நான்கு எண்சீர் ஆசிரிய விருத்தக் கவிதைகளில் காட்டுவர். ஈண்டு இரண்டைக் காட்டுவேன். அலைமகளைக் கீழ்வானில் முத்தமிட்டே அலர்கதிரால் உடல்தழுவி விடையும் பெற்று நிலைபெயர்ந்து வானிலுயர் கதிரைக் கண்டு நீர்க்கமலம் மெல்லிதழை விரிக்கக்கண்டேன் அலைமகளுக் கவன்கணவன், தாமரைக்கோ அவன்மேலே பெருங்காதல் இரண்டி னுக்கும் நிலையளிக்கும் கதிரோனுக் குலகைச் சூழும் நீளிருளை யொழிப்பதுவே இலட்சி யம்மாம். காலையிலே இருள்கிழித்தே எழுவான், வானிற் கண்சிமிட்டு மீன்கூட்ட மழிப்பான், குளிர்பூஞ் சோலையிலே ஒளிபரப்பி எழிலைச் சேர்ப்பான் தோகைமயி லாடலுக்கு வண்ணம் கோர்ப்பான் சாலையிலே நடமாட முடியா வண்ணம் தகித்திடுவான் அப்போதும் நன்மை செய்வான் வேலையிலே கிடக்கின்ற நீரை மேலே மேகமென ஏற்றிமழை பொழியச் செய்வான். கவிஞர் தாம் உற்றுநோக்கி நேரில் கண்ட காட்சிகளை நம்மையும் தம் கவிதை மூலம் காணச் செய்கின்றார். அவற்றை நாம் நேரில் காணும் காட்சிகளுடன் ஒப்பிட்டு மகிழ்கின்றோம். 2. நிலவரசள் : நிலவரசே என்ற தலைப்பில் நிலவரசனைப் பற்றி நான்கு அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்கள் உள்ளன. நான்கும் நம் மனத்தில் நவநவமான காட்சிகளை எழுப்பவல்லவை. அவற்றுள் இரண்டினை மட்டிலும் ஈண்டுத் தருவேன். கலையொளிரக் கண்சிமிட்டும் மீன்கடிட்டம் கணக்கிலவாய்க் கிடந்த போதும் நிலையுயர்ந்த உன்றனொளி காட்டுகின்ற நீளானைக் கடங்கி நாளும் தலையெடுத்துத் தோன்றுமிடம் தப்பாமல் தான்தோன்றி மிளிரு கின்ற நிலையறிந்தேன் நிலவரசே, நின்னாணை நிலவுகின்ற நிறமும் கண்டேன். ஆடிவரு முன்தோற்றங் கண்டுள்ளம் அசைந்தாட இன்ப வெள்ளம் கூடிவர இதழ்விரிக்கும் குமுதத்தாள் குறுநகையைப் பார்த்து நீயும்