பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. சவகர்லால் 13: ஒதிய கவிஞ னே.இவ் வுலகினில் கடவுள் பேரால் தீமையின் சிரிப்பைக் காணத் திரும்பியே வருவா யாc ! ஒன்பது பாடல்களில் மூன்றினை மட்டிலும் தந்தேன். நாட்டிலே மாற்றம் வேண்டும். ஆனால் இப்படி இழிநிலைக்கு இறங்கியது நமக்கு வருத்ததைதான் நல்குகின்றது. இயற்கையில் நடைபெறுவது மாற்றம் தோற்றத்தில் இருந்தபடி இருப்பின் யாதும் துளிப்பெருமை பெறுவதில்லை" என மாற்றம் பற்றிக் கூறுகிறார் கவிஞர். பதித்தவிதை முளையாகி தளிரா யாகிப் படர்ந்துவரும் கொடியாகி நுனியில் முத்துப் பதித்ததுபோல் மொட்டாகிச் சிரித்து நிற்கும் படர்மணத்துப் பூவாதல் இயற்கை மாற்றம் குதிகொண்ட நெஞ்சத்துக் குமரி கொய்யக் குழலேறி அழகுபெறல் அடுத்த மாற்றம் கதிரோடு வேண்டிநின்ற வண்டுங் கூடத் தொடர்விரும்பா துதிர்ந்திடுதல் இறுதி மாற்றம். இயற்கை மாற்றம் முதல் இறுதி மாற்றம் வரை படிப்படியாகக் கூறுதல் அற்புதம், இதில் ஆங்கிலக் கவிஞர் வொர்ஸ்வொர்த்துக்குநிகராகின்றார். அடுத்து பருவ மாற்றத்தைக் கூறுவது இதைவிடச் சிறக்கின்றது. கள்ளமிலாச் சிரிப்போடு கழுத்தைக் கட்டிக் கைகொட்டி மேல்விழுந்து முத்த மீந்த வெள்ளையுளச் சிறுபெண்ணா ளொதுங்கி நின்று மேலாடை சரிசெய்து நிலத்தைப் பார்த்தே உள்ளத்து மகிழ்ச்சிக்கோர் அணையைக் கட்டி ஒரத்தில் இதழசைத்துத் துார நின்று வெள்ளத்து வாடுகின்ற கொடியைப் போல விளங்குகின்ற நிலையதுதான் பருவ மாற்றம். காலத்தைப் பெண்ணாக உருவகித்து பருவ மாற்றத்தைக் கூறுவதால் அதனைப் படிக்கும் நாம் அடையும் மகிழ்ச்சிக்கோர் எல்லை இல்லை. அமுதசுரபி, தேனாறு, தமிழ்ப்பணி போன்ற இதழ்களில் வெளிவந்த பாடல்களையும், எதிலும் வெளிவராத பாடல்களையும் தொகுத்து வைத்துள்ளார். அவை வெளிவந்தால் கவிஞர் ச.சவகர்லாலின் பெருமை மேலும் உயரும் என்று கூறி அவர் பற்றிய கவிதையை நிறைவு செய்கின்றேன். இவர் அழகப்ப ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 1960) என் மாணாக்கராக இருந்தார் என்ற பெருமிதம் எனக்கு என்றுமே உண்டு.