பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 வாழும் கவிஞர்கள் 2. இயற்கை இயற்கையைப் பாடாத கவிஞர்களே இல்லை. ஒவ்வொருவரின் நோக்கிற்கேற்ப, நோக்கத்திற்கேற்ப, வருணனையும் குறிப்பிடும் பொருளும் வேறுபடும்.இவை கவிஞரின் ஆளுமையைப் பளிங்கெனக் காட்டும். விண்ணில் காணப்பெறும் இயற்கையைக் கவிஞர் வருணிப்பதன் பாங்கைக் காண்போம். சில பாடல்களை ஈண்டுத் தருவேன். இயற்கையெனும் பெருவியப்பே ! மாயச் சித்தே ! எத்தனைஎத் தனைக்கோலம் காட்டு கின்றாய் ! உயர்வானக் கூடாரம் படைத்தாய் ! அங்கே ஒவியமாய் வண்ணவண்ண முகில்ப டைத்தாய் ! வானகத்தின் முற்றத்தை அலங்க ரிக்க வைரப்பூ விண்மீன்கள் பதித்தாய் ! பாவம் தேனிலவை ஏனிங்கே திங்கள் தோறும் தேய்த்துப்பின் வளர்க்கின்றாய்? என்ன கூத்து? ஊனத்தைத் திங்களுக்குச் சேர்க்கும் நீயோ உடல்கதித்த கதிரவனைத் தீண்டல் ஏது? இப்பாடல்களில் காணப்பெறும் வானக் காட்சிகளை மனத்திரையில் எழச் செய்து அனுபவிக்கின்றோம். மத்தாப்பு மழைபொழிய வைக்கும் போதோ வைரஒளி மின்னலெனும் தோர ணத்தைக் கித்தாப்பாய்க் காட்டுகின்றாய் ! ஆனால் எங்கோ கிழச்சிங்கம் கத்துதல்போல் இடியைப் போட்டு எத்தனைபேர் விழிகளினைப் பறித்தாய்? மேலும் ஏனிங்கே புயலாகச் சிறு கின்றாய்? கொத்துகொத்தாய் உயிர்களினைப் பறிக்கும் உன்றன் கூற்றுக்கும் தாய்மைக்கும் தொடர்பா உண்டு? இது மழை, மின்னல், இடி, ஆகியவற்றைக் காட்டுகின்றது. கூற்றுக்கும் தாய்மைக்கும் உறவு ஏதாவது இருக்குமா என்று வினவுகின்றார். மின்னலெனும் வால்விளக்கே ! மழைப்பி றப்பை விளம்புகின்ற ஒளித்துதே ! மேகச் சேலை பின்னிநிற்கும் தங்கவண்ணக் கரையே ! நல்ல பேரிரைச்சல் வெடிஇடியின் திரியே வாடும் அன்னைமண்ணின் உயிரெல்லாம் சிரிக்க வைக்க ஆடிவரும் பேரொளியே கவிஞர் உன்னை