பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. வேழவேந்தன் 195 ‘மின்னலென்றா அழைத்தார்கள்? உழவர் மான விதி.எழுத்தே ! நீயன்றோ? மறுப்பும் உண்டா? எண்ணெய்இன்றி எரிகின்ற கயிறே ! ஒடும் எலும்பில்லா முகிலுக்கே உணர்ச்சி யூட்டி மண்ணெல்லாம் பொன்னாக்கும் காந்தப் பெண்ணே ! மழைப்பெண்ணின் திருமணத்து மத்தாப் பூ வே! கண்சிமிட்டிக் கண்சிமிட்டி மறைவ தேனோ? கருவுற்ற திருமங்கை மேக மென்னும் பெண்ணங்கின் உடல்வடிவை முழுதும் காட்டல் பிழையென்றா மறைக்கின்றாய்? விளக்கம் தேவை ! விடியாதா எனஏங்கும் பயிருக் கெல்லாம் - விடிவெள்ளி நீயன்றோ? ஊசி' யைப்போல் வடிவத்தை ஏன்பெற்றாய்? வான்மு கட்டின் வயிற்றினிலே துளையிட்டா மழைக்கொ ணர்ந்தாய்! பொடியாலே போடுகின்ற கோலம் போலே பொற்கொடியை யார்வரைந்தார் உண்னை? தேரின் கடிவாளம் போன்றவளே ! தட்டி விட்டால் கடும்பஞ்சம் எனும்பகைவர் வீழ்ந்தி டாரா? எட்டாத துரத்தில் மயங்கித் தாங்கும் எருமைகளாம் மேகத்தை எழுப்பு தற்கே - நெட்டிழைபோல் வந்ததொரு சூட்டுக் கோலே' ! நெடும்இடிபெண் காற்சதங்கை ஒளிப்பி ழம்பே ! கட்டணமே இல்லாமல் வெளிய ரங்கின் கடைவிதி எரிகின்ற சரவி ளக்கே ! வெட்டவெளிச் சிறகினிலே அடைந்தி ருக்கும் - விண்மழைப்பெண் விடுதலைக்கே திறவு கோல் நீ ! இந்த நான்கு பாடல்களையும் ஆர அமரப் படிக்கும்போது பல்வேறு படிமங்கள் மின்னலைப் போலவே எழுந்தும் மறைந்தும் நம்மை மகிழ்விப்பதை அறியலாம். - . வானம் பற்றிய அற்புதமான பாடல்களில், கவிஞரின் சிந்தனை யோட்டத்தைசிறப்பாகக் காணலாம். வானகமே வெளியரங்கே ! கட்ட ணத்தை வாங்காமல் காட்சிகள் ஏன் காட்டு கின்றாய்? கூனலிளம் பிறைக்காட்சி அளிப்பாய், ஒர்நாள் குளிர்உமிழும் முழுநிலவை அனுப்பி வைப்பாய் ! கீழ்வான மூலையிலே இருள்கி ழித்துக் கிளம்புகின்ற நெருப்புருண்டைப் பரிதி யாலே சூழ்ந்துள்ள பனிப்பஞ்சும் எரியும்; உன்றன் சுடர்த்திரையும் எரிந்திடுமோ? அஞ்சுகின்றோம்!