பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. வேழவேந்தன் 199 வாடையாம் பனியை நீயோ வதைக்கின்றாய் வந்த பின்னால் ! காடெலாம் சோலை யெல்லாம் காய் கனி குலுங்கி நிற்க வேடிக்கைக் காட்சி காட்டும் வியப்பான பருவம் நீயே! பருவத்தைப் பாராட்டுகின்றார். இயல்பான வருணணை. முத்தனின் மார்பில் மட்டும் முகிழ்த்திடும் வியர்வை யோட்டம் மெத்தையில் புரளு கின்ற வேடப்பர் உடலில் கூட முத்தாக அரும்பு தற்கே - முழுமுதற் கார னம்நீ! தத்துவச் சமத்து வத்தைச் சரியாகத் தந்தாய்: நன்றி இந்தக் கிண்டல் கவிதை நளினமான நகைச்சுவையையும் நல்குகின்றது. உயரத்தே வானில் செல்லும் ஒளிக்கதிர்க் கரங்க ளாலே துயரத்து வெப்ப முட்டிச் சுடுகிறாய்! ஆனால் குன்றின் உயரத்தில் உதகை வந்தே உட்கார்ந்தால் குளிர்ச்சி ஏனோ? வெயிலிலே கூட இந்த வேற்றுமை தேவை தானா? இயல்பான கிண்டல் இது காலமும் பணியில் மூழ்கும் கவின் 'கொடைக் கானல் தன்னில் ஏலக்காய் ஏர்க்காட் டுரில் எழில்பூத்த உதகை மண்ணில் கோலங்கள் மிளிர வைப்பாய்! கூட்டத்தை ஈர்க்க வைப்பாய்! சேலத்து மாம்ப ழத்தின் சீர்ப்பாடும் தூதும் நீநீ! விசிறிக்குப் பெருமை சேர்க்கும் விசிறிநீ! கருமி கூட தசைவேகா திருப்ப தற்குத் தன்காலில் செருப்பைப் போட