பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 வாழும் கவிஞர்கள் பாகான வள்ளுவரை உலகோர் கூடிப் பாராட்டும் காலமிங்கே துர மில்லை ஏகஇந்தி யாமாந்தர் மனுவை மிஞ்சும் எழிற்குறளைப் போற்றுகின்ற திருநாள் தோன்றும் வேகாத சோறெல்லாம் குதிக்கும் போது வெந்திருக்கும் பானைகளாய் நாம்பொ றுப்போம். எனக் குறளைத் தேசியமாக்கும் அவாவை வெளிப்படுத்துகிறார். முடிவாக இந்தக் கவிஞரின் பாடல்களில் அளவு மீறிய தமிழ்ப்பற்று, சொல்நயம்,பொருள்நயம் கற்பனை வளம்,பொருட் செறிவு நிறைந்த உரைகள், பல்வேறுவகை உள்ளங் கவரும் படிமங்கள் ஆகியவை நிறைந்து திகழ்கின்றன என்று கூறி இவர் புற்றிய கவிதையை நிறைவு செய்கின்றேன்.