பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. டாக்டர். அர. சிங்கார வடிவேலன் இவர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் கண்டனூரில் 1937இல் பிறந்தார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பைக் கண்டனூரில் முடித்துக்கொண்டு, அழகப்பர் கல்லூரியில் பயின்று, பி.ஏ. (1858 - பொருளாதாரம் எம்.ஏ தமிழ்-1960 பட்டம் பெற்று அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பி.டி பட்டம் (1961) பெற்றார். அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் மூன்றாண்டுகள் (1961-64) விரிவுரையாளராகவும் அழகப்பா கல்லூரியில் ஒன்பது ஆண்டுகள் (1964-72) தமிழ் விரிவுரையாளராகவும், தேவகோட்டைச் சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில் இருபத்து ஆறு ஆண்டுகள் 72-96தமிழ்த் துறை தலைவராகவும் பணியாற்றி 1996 மே மாதம் ஓய்வு பெற்றவர். இவருடைய நேர்மையையும், திறமையையும் பாராட்டித் தேவகோட்டைக் கல்லூரி நிர்வாகம் இவரை (1974-1991 இக்கல்லூரித் துணை முதல்வராக்கியது. நான் (1950-60 வரை டாக்டர் அழகப்பர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றிய காலம். 1960 ஆகஸ்டு திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையில் பணியேற்க வேண்டிய நிலை. திரு. சிங்கார வடிவேலன் ஆகஸ்டு முதல்வாரத்தில் பயிற்சிக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். 20 நாட்கள்தாம் என் மாணவர். மாணவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அறிந்து கொள்ள முடியிாத நிலை, இந்நிலையில் அவர் குறுகிய காலத்தில் என்னைப் பற்றிச் சில பாடல்களைப் பாடி, அச்சிட்டு சூலை 28ல் ஒரு சிற்றுண்டி விருந்துடன் அப்பிரிவு உபசாரப் பாடல்களைப் பாடி வழியனுப்பிவைத்த நிகழ்ச்சி இன்னும் என் உள்ளத்தில் பசுமையாக உள்ளது. அக்காலத்தில் மாணவப் பருவத்திலேயே விரைந்து கவிபாடும் வேந்தாகத் திகழ்ந்தவர் அர.சிங்கார வடிவேலன். அந்தப் பாடல்கள் 20 ஆண்டுக் காலம் என்னிடம் இருந்தன. 1980 வரை சென்னையில் குடியேறிய போது எப்படியோ தொலைந்து விட்டன. கல்லூரியில் இன்னும் உள்ளன. பொதுவாகச் செட்டிநாட்டுப்பகுதியில் தமிழுக்கு எக்காலத்திலும் ஏற்றமே. பலர் கவி பாடுவதில் தம் திறமையை வளர்த்துக் கொண்டு