பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர. சிங்கார வடிவேலன் 2甘 வாய்ப்பிருந்தால் இம்மகள்மேல் இரக்கம் காட்டி மறுதாரம் கொள்களன வணங்கு கின்றேன். இதில் கண்வீச்சுத் தொடங்குகின்றது. அடுத்த பாடலில் கொஞ்சும் தமிழில் கெஞ்சும் பாவனையில் வேண்டல் விண்ணப்பம் விடுகின்றார். வயதாகி விட்டதென நினைக்க வேண்டா மாநிறமாய் இருப்பதனால் மறுக்க வேண்டா வயதாகிப் போனாலும் தமிழை நீங்கள் வாழ்க்கைக்குத் துணையாகக் கொண்டாற் போலப் புயலாலே சிதறுண்ட பூவைப் போலப் பொலிவிழந்த அடியேனைச் சாந்தி செய்யும் வயதாகி விடுமுன்னே மணந்து கொண்டு மனத்துக்குச் சாந்திதர வேண்டு கின்றேன். பலே மகள்தான், வாயுள்ள பெண்தான். பிழைத்துக் கொள்வாள் போல் தோன்றுகின்றது. சிங்காரி பழங்காலத்துப் பத்தாம் பசலிப் பெண்ணல்ல. மேலும் ஒட்டுகின்றாள் மகள். பட்டாலே வையத்தைப் பாலிக்க வந்தவரே வீட்டாளாய் ஏற்கவென வெட்கமின்றிக் கேட்கின்றேன் திரண்டிருக்கும் உறுப்பழகில் தினவடக்க ஆளின்றி இரண்டோடு மூன்றாக ஏற்கவெனக் கெஞ்சுகின்றேன் மங்கை எனக்கு வயசதிகம் என்பீரா? அங்கென்ன வாழ்கிறதாம் ஐம்பதுதான் ஆகிறதே என்நிறத்தை வெறுக்காதீர் எம்பெருமான் நீர்வணங்கும் கண்ணன் நிறமென்ன? காக்கை நிறந்தானே ஆடி முடித்த அரசர்நீர் என்றாலும் பாடிச் சுகந்தருவீர் படுக்கைச் சுகம்வேண்டா ! அற்புதமான கற்பனை. சந்தர்பத்திற்கு ஏற்றவாறு பேசும் மகளின் திறனை வியக்கின்றோம். தொடர்ந்து அவன் தன் அவலத்தைக் கூறுகிறாள். நீதி சரியில்லை நினைப்புத் தவறெனினும் சாதி சரிதானே சமர்த்தேநீ இசைந்திடுக கரையும் மனமுடையாய் கைகொடுக்க இசைந்தாலும் முறைகேட்கும் ஆச்சியர்கள் முடிக்க விடமாட்டார் எவரே தடுத்தாலும் என்வாழ்வில் பொங்கிவரும் அவலம் உரைப்பேன் அடுத்து. பார்ப்பனர் வீட்டு மகள் பெறும் துன்பத்திலும் மிகுதியாகவே செட்டிமகள் துன்புறுகின்றாள். திருமணச் செலவு சொல்லி மாளாது. செல்வமில்லாதார்